Home கலை உலகம் துல்லிய ஒளிபரப்பில் தீபாவளி சிறப்பு உள்ளூர் நிகழ்ச்சிகள்!

துல்லிய ஒளிபரப்பில் தீபாவளி சிறப்பு உள்ளூர் நிகழ்ச்சிகள்!

740
0
SHARE
Ad

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அஸ்ட்ரோவின் துல்லிய ஒளிபரப்பான விண்மீன் எச்.டி. அலைவரிசையிலும் பல அதிரடியான சிறப்பு உள்ளூர் நிகழ்ச்சிகளைப் படைக்கவிருக்கிறது. அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231-இல் வலம் வருகின்றது.

அடாவடி தீபாவளிபாகம் 1 (27/10/2019) மற்றும் பாகம் 2 (28/10/2019), மதியம் 2.30

பால கணபதி இயக்கத்தில் நகைச்சுவை நிறைந்த இந்நாடகத்தில் பிரபல நம் உள்ளூர் கலைஞர்களான சங்கீதா, சத்தியா, சசி குமார் ஆகியோருடன் வளர்ந்து வரும் கலைஞர்களான ஹேமா, சுபாஷினி மற்றும் அருண் நடித்துள்ளார்கள்.

#TamilSchoolmychoice

சவாலுக்கு ரெடியா (Savalukku Ready Ah?), மாலை 6.30 (27/10/2019)

ஸ்ரீ சோனிக் மற்றும் காயத்ரி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பல அரிய பரிசுகள் தட்டிச் செல்லும் கேம் ஷோ ஆகும்.

யார் உங்கா கோலிவுட் கிங், மாலை 6.30 (27/10/2019)

மலேசியர்களை நேர்காணல் செய்து யார் சிறந்த கோலிவுட் நடிகர் என ஆராயும் நிகழ்ச்சியாகும்.

ரசிக்க ருசிக்க சீசன் 5, இரவு 9 (27/10/2019)

பாலகணபதி தொகுத்து வழங்கும் ரசிக்க ருசிக்க சீசன் நிகழ்ச்சியில் மலேசியாவிலுள்ள சிறந்த வாழை இலை உணவுகள் கொண்ட உணவகங்களின் தகவல்களை இந்தத் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் கண்டு அறிந்து கொள்ளலாம்.

அடாவடி தீபாவளிபாகம் 2, மதியம் 2.30 (27/10/2019)

பால கணபதி இயக்கத்தில் நகைச்சுவை நிறைந்த இந்நாடகத்தில் பிரபல நம் உள்ளூர் கலைஞர்களான சங்கீதா, சத்தியா, சசி குமார் ஆகியோருடன் வளர்ந்து வரும் கலைஞர்களான ஹேமா, சுபாஷினி மற்றும் அருண் நடித்துள்ளார்கள்.

பக்கா லோக்கல், இரவு 9 (28/10/2019)

ஸ்ரீ சோனிக் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் மலேசியா முழுவதும் உள்ள சிறந்த உணவகங்களில் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு மகிழலாம்.