Home One Line P2 அஸ்ட்ரோ வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் பக்கிரி உட்பட 8 படங்கள்!

அஸ்ட்ரோ வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் பக்கிரி உட்பட 8 படங்கள்!

731
0
SHARE
Ad

தமிழ்த் திரைப்படங்களுக்கான பிரத்தியேக அலைவரிசையான வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பக்கிரி திரைப்படம் தீபாவளியன்று இரவு 9 மணிக்கு ஒளியேறவுள்ளது. அதோடு தடம், மாரி 2, தேவ் போன்ற திரைப்படங்கள் அஸ்ட்ரோ வெள்ளித்திரை அலைவரிசை 202-இல் கண்டு மகிழலாம்.

மாரி 2 (26/10/2019)

அஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), இரவுதிருந்தி வாழ நினைக்கும் முன்னாள் ரவுடிக்கும், அவனை பழிவாங்க துடிக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகும். தனுஷ், சாய் பல்லவி, ரோபா சங்கர், அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

#TamilSchoolmychoice

தும்பா (27/10/2019)

அஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), இரவுதும்பா என்ற புலி வனப்பகுதியில் இருந்து தப்பிக்க, அதை ஒரு சிலர் சட்டத்திற்கு விரோதமாக பிடித்து விற்க முயற்சி செய்கின்றனர். இதை அறிந்த தீனா, தர்ஷன்கீர்த்தி அந்த புலியை காப்பாற்ற களத்தில் இறங்க, பிறகு என்ன ஆனது என்பதுதான் கதையாகும்.

தடம் (27/10/2019)

அஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), மதியம்ஒரு பணக்கார இளைஞரை அருண் விஜய் கொலை செய்கின்றார். அடுத்தநாள் போலிஸ் இந்த கேஸை கையில் எடுக்க, இதில் அருண் விஜய் புகைப்படம் அந்த வீட்டில் இருப்பது தெரிகின்றது. ஆனால், இரண்டு அருண் விஜய் இருப்பதால்இவர்கள் யார், இவர்களில் யார் அந்த கொலையை செய்தார்கள்? என்பதை போலிஸ் துப்பறிய ஆரம்பிக்கின்றது.

பொட்டு (27/10/2019)

அஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), மாலைஇயக்குனர் வி சி வடிவுடையான் இயக்கத்தில் பரத், நமீதா, இனியா, மனிஷா யாதவ் மற்றும் பலர் நடித்துள்ள திகில் திரைப்படமாகும்.

பக்கிரி (27/10/2019)

அஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), இரவுமும்பையில், தந்தை யார் என்று தெரியாமல் தாயுடன் வாழ்ந்து வரும் தனுஷ், திடீரென ஒரு நாள் தனுஷின் தாய் இறந்துவிட அவருக்கு பாரீசில் இருக்கும் தந்தை அனுப்பிய கடிதம் கிடைக்கிறது. இதையடுத்து தந்தையை சந்திக்க பாரீஸ் பயணிக்கிறார். கையில் பணம் இல்லாமல் ஒரு கடைக்குள் தூங்கிவிட, அவர் தூங்கிய பெட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு பல பிரச்சனைகளை தனுஷ் சந்திக்கிறார் அதனை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதையாகும்.

நேத்ரா (28/10/2019)

அஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), காலைநட்பையும், காதலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் வினய், தமன் குமார், சுபிக்ஷா, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

தேவ் (28/10/2019)

அஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), பிற்பகல் 12 ஒரு பெண்ணுடன் கமிட் ஆகி வாழ்க்கையில் செட்டில் ஆக முடியும் நினைக்கும் கார்த்தி, ராகுல் ப்ரீத்சிங்கி மனதை கவர்ந்தாரா என்பதுதான் கதையாகும்.

படையப்பா (28/10/2019)

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), மதியம்தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு படையப்பா எப்படி தன்னுடைய குடும்பத்தை வழிநடந்துகின்றார் என்பதுதான் கதையாகும். இத்திரைப்படத்தில், சிவாஜி கணேசன், ரஜனி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.