Home One Line P1 சுகாதார அமைச்சுடனான விநியோகத்தை முடித்துக் கொள்ள இருப்பதைத் தொடர்ந்து பார்மாநியாகா பங்குகள் சரிவு கண்டன!

சுகாதார அமைச்சுடனான விநியோகத்தை முடித்துக் கொள்ள இருப்பதைத் தொடர்ந்து பார்மாநியாகா பங்குகள் சரிவு கண்டன!

774
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கான சலுகைகளை முடித்துக் கொள்ள இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, புர்சா மலேசியாவில் பார்மாநியாகா பெர்ஹாட்டின் (Pharmaniaga Berhad) பங்குகள் மதியம் 2.53 மணியளவில் 36 சென் குறைந்து 2.14 ரிங்கிட்டாக நிலைத்தது.

மொத்தம் 536,700 பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டன.

இன்று வியாழக்கிழமை இச்செய்தியை அறிவித்த சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகம்ட, திறந்த ஒப்பந்த முறை அறிமுகப்படுத்தப்படுவதால் தளவாடங்கள் மற்றும் விநியோக சேவைகளுக்கு இனி சலுகைகள் கிடைக்காது என்றார்.

#TamilSchoolmychoice

அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பு கொள்முதல் பட்டியலில் (ஏபிபிஎல்) குறைந்தது 700 மருந்து தயாரிப்புகளை வாங்குவதற்கும், சேமிப்பதற்கும், வழங்குவதற்கும், விநியோகிப்பதற்குமான பார்மாநியாகாவின் சலுகை நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

பார்மாநியாகாவின் 2018-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சுகதார அமைச்சுக்கு அதன் ஏபிபிஎல் தயாரிப்புகளின் விற்பனை ஒன்பது விழுக்காடு அதிகரித்து 1.2 பில்லியனாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், இந்த குழு 2.38 பில்லியன் ரிங்கிட் வருவாயில் 42.47 மில்லியன் நிகர பண்புக்கூறு இலாபத்தை பதிவு செய்துள்ளது.

2017-2019-ஆம் ஆண்டு ஏபிபிஎல் தயாரிப்பு மதிப்பாய்வில் 136 புதிய தயாரிப்புகள் அடங்கியுள்ளதாகவும், இது ஏபிபிஎல் தயாரிப்புகளின் வரம்பை 20 விழுக்காடு அதிகரித்து கிட்டத்தட்ட 750 தயாரிப்புகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.