Home One Line P1 “தஞ்சோங் பியாய்: அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் மசீச வேட்பாளருக்காக களம் இறங்க தயார்!”- சாஹிட் ஹமீடி

“தஞ்சோங் பியாய்: அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் மசீச வேட்பாளருக்காக களம் இறங்க தயார்!”- சாஹிட் ஹமீடி

657
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் அம்னோவின் அடிமட்ட உணர்வுகள் தற்போது சீராக இருப்பதாகவும், அவர்கள் தேசிய முன்னணி வேட்பாளரான மசீசவின் வீ ஜெக் செங்கை ஆதரிப்பதாகவும், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் தெரிவித்தார்.

அவர்கள் தேசிய முன்னணி தேர்தல் இயந்திரத்துடன் இணைந்து அதன் வேட்பாளர்களுக்கு பின்னால் ஒன்றுபட இயங்க இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அம்னோ வேட்பாளர் தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துவதில் அவர்களிடத்தில் வலுவான உணர்வுகள் இருந்தன. ஆனால் தேசிய முன்னணியின் கூறு கட்சிகளிடையே ஒற்றுமை மனப்பான்மைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.”

இந்த அர்த்தத்தில்தான் அனைத்து கட்சிகளிலிருந்தும் அனைத்து தேசிய முன்னணி இயந்திரங்களும் வீக்கு முழு ஆதரவை வழங்குவதன் மூலம் ஒரே திசையில் நகர்கின்றனஎன்று சாஹிட் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

“அவர்கள் மசீச வேட்பாளரை வெல்ல வைப்பார்கள். இந்த விஷயத்தில் இனப் பிரச்சனைகளை எழுப்ப வேண்டாம்.” என்று அவர் கூறினார்.