Home One Line P2 அல் பக்டாடி கொல்லப்பட்டது தொடர்பான காணொளிகளை பென்டகன் வெளியிட்டது!

அல் பக்டாடி கொல்லப்பட்டது தொடர்பான காணொளிகளை பென்டகன் வெளியிட்டது!

924
0
SHARE
Ad

வாஷிங்டன்: முன்னாள் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பாக்கர் அல் பக்டாடி  கொல்லப்பட்டது தொடர்பான காணொளி காட்சிகளை டிரம்ப் நிர்வாகம் கடந்த புதன்கிழமை வெளியிட்டதாக துருக்கிய செய்தி நிறுவனம் அனடோலு தெரிவித்துள்ளது.

அமெரிக்க துருப்புக்கள் மீது ஒரு குழு போராளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை கருப்பு மற்றும் வெள்ளை படக்காட்சிகள் காட்டுகிறது.

பென்டகனின் கூற்றுபடி அப்போராளிகள் அல் பாக்டாடியின் கூட்டாளிகள் அல்ல, ஆனால், அவர்கள் அமெரிக்க இராணுவத்தின் மீது தொடர்ந்து விரோதப் போக்கை வெளிப்படுத்தினார்கள் என்று ஜெனரல் கென்னத் மெக்கென்சி செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

காணொளி காட்சிகளில் தீவிரவாதிகளுக்கு அருகே பல வெடிப்புகள் நிகழ்வதும், 10 உறுப்பினர்கள் அடங்கிய அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் குழு அல்பாக்டாதி மறைந்திருக்கும் இடத்தை நெருங்குவதையும் காட்டுகிறது.

அவ்வளாகத்திற்குள் இருப்பவர்கள் வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், பலர் அவ்வாறு செய்தபின், அவர்கள் கைது செய்யப்பட்டு துப்பாக்கி சோதானிக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் மெக்கென்சி கூறினார்.

இந்த குழுவில் 11 குழந்தைகள் இருந்தனர் என்றும், ஆனால் ஐந்து நபர்கள் அவ்வாறு செய்ய ஒத்துழைக்க மறுத்ததாகவும் அவர் கூறினார்.

முற்றத்தில் இருந்த ஐந்து ஐஎஸ் உறுப்பினர்கள் அமெரிக்க இராணுவத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். சரணடைவதற்கு தொடர்ந்து இராணுவத்தினர் அரபு மொழியில் அறிவுறுத்தியும் அவர்கள் பதிலளிக்கவில்லை. பின்னர் அவர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர்என்று மெக்கென்சி கூறினார்.

அமெரிக்க இராணுவத்திலிருந்து தப்பிக்க முயன்றபோது அல் பக்டாதி இரண்டு குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்றதாகக் காணப்பட்டதாக மெக்கென்சி கூறினார்.

அல் பக்டாதி அணிந்திருந்த வெடிபொருட்களை வெடித்ததில் அவ்விரு குழந்தைகளும் கொல்லப்பட்டனர் என்றும் அதனால் அவர்களைச் சுற்றியிருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது என்றும் பதிவிட்டார்.

இந்த நடவடிக்கையில் நான்கு பெண்கள் உட்பட ஆறு ஐஎஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்று மெக்கென்சி கூறினார்.

இந்த எண்ணிக்கையில் அல் பக்டாடியும் சம்பந்தப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட நடவடிக்கை குறித்து டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.

2011-இல் கொல்லப்பட்ட அல் கயிடா தலைவரான ஒசாமா பின்லேடனின் உடலை அமெரிக்கா அப்புறப்படுத்திய அதே வழியில் அல்பக்டாடியின் உடல் ஆயுத மோதலின் சட்டத்தின்படி கடலில் புதைக்கப்பட்டிருப்பதை மெக்கென்சி உறுதிப்படுத்தினார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கணொளி இணைப்பில் பென்டகன் வெளியிட்ட அக்காணொளியைக் காணலாம் (நன்றி கார்டியன் செய்தித்தளம்):