Home One Line P2 திருக்குறள் தாய்லாந்து மொழிபெயர்ப்பை பேங்காக்கில் வெளியிட்டார் நரேந்திர மோடி

திருக்குறள் தாய்லாந்து மொழிபெயர்ப்பை பேங்காக்கில் வெளியிட்டார் நரேந்திர மோடி

1178
0
SHARE
Ad

பேங்காக் – இங்கு நடைபெற்ற ஆசியான் நாடுகளின் தலைவர்களின் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்வதோடு, ஆசியான்- இந்தியா இடையிலான கலந்துரையாடலிலும் பங்கு கொள்ள பேங்காக் வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அவரது நிகழ்ச்சிகளில் முத்தாய்ப்பாக விளங்கியது திருக்குறள் தாய்லாந்து மொழியில் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திருக்குறளின் தாய்லாந்து பதிப்பை அவரே வெளியிட்டதாகும்.

தாய்லாந்து மொழியிலான திருக்குறளை வெளியிட்ட தகவலைப் புகைப்படத்தோடு, மோடி தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு தமிழிலேயே “தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டேன்…” என்றும் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice