Home One Line P1 “நிலுவையில் உள்ள தொகையை பயண நிறுவனத்திடம் செலுத்துவேன்!”- அஸ்மின்

“நிலுவையில் உள்ள தொகையை பயண நிறுவனத்திடம் செலுத்துவேன்!”- அஸ்மின்

560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி, விமான பயணக் கட்டணச் சீட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

328,901 ரிங்கிட் நிலுவையில் உள்ளதாக அவருக்கு எதிராக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அழைப்பாணை குறித்து கேட்டதற்கு, உரிமைகோரல் அறிக்கையை மறுஆய்வு செய்வதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நான் இன்னும் அனுப்பப்பட்ட அழைப்பாணையைக் காணவில்லை. சம்பந்தப்பட்ட பயண முகவர் அளித்த கூற்றுக்களை மறுஆய்வு செய்யுமாறு எனது அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். இன்னும் செலுத்தாத தொகை நிலுவையில் இருந்தால், நான் செலுத்த வேண்டியிருக்கும், செலுத்த வேண்டிய பொறுப்பு உண்டு.” என்று அவர் கூறினார்.

முன்னதாக, 328,901 ரிங்கிட் தொகையைப் பாக்கியாகத் தங்களுக்குச் செலுத்த வேண்டுமென ஒய்.எச்.ஏ டிராவல் அண்ட் டூவர்ஸ் (YHA Travel & Tours Sdn Bhd) என்ற பயண நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

செப்டம்பர் 2018 முதல் ஆகஸ்ட் 2019 வரை அஸ்மின் அலியின் பயணங்கள், விடுதிகளில் தங்கியது ஆகியவை தொடர்பில் இந்தப் பாக்கி செலுத்தப்பட வேண்டுமென அந்த வழக்கின் மனு தெரிவிக்கிறது என மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

அஸ்மின் அலி, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அமைச்சு ஊழியர்கள் ஆகியோருக்கும் சேர்த்து இந்தக் கட்டணப் பாக்கி ஏற்பட்டுள்ளதாக அந்த வழக்கு மனு குறிப்பிடுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக எந்தவிதப் பிரச்சனையும் இன்றி அஸ்மினுடன் வணிகத் தொடர்புகள் கொண்டிருப்பதாகவும், பாக்கித் தொகையைக் கேட்டு இரண்டு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பியும் அஸ்மின் தரப்பிலிருந்து எந்தவிதப் பணமும் செலுத்தப்படாத காரணத்தால்தால் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் ஒய்.எச்.ஏ பயண நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.