Home One Line P1 தஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்!- மகாதீர்

தஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்!- மகாதீர்

1089
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த நவம்பர் 16-ஆம் தேதி தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் வெற்றி அடைந்தால் நம்பிக்கைக் கூட்டணி செய்து தந்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

வாக்காளர்கள் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான கர்மெய்ன் சர்டினியின் நம்பகத்தன்மையை ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் உறுதியளித்தார்.

வாக்காளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெற்றால், ஜோகூர் மற்றும் மத்திய மட்டங்களில் அரசாங்கமாக இருக்கும் நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.”

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி அல்லது மசீசவின் வெற்றி, ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்களால் அரசாங்கத்தையோ அல்லது ஜோகூரையோ மாற்ற முடியாது,” என்று அவர் கூறினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர் கூறினார்.

நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நான் உட்பட, அனைவரும் களத்திற்கு பிரச்சாரத்திற்காக வருவோம். “என்று அவர் கூறினார்.

மாரடைப்பால் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி பெர்சாத்துவின் டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் காலமானதைத் தொடர்ந்து தஞ்சோங் பியாய்யில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தேசிய முன்னணி, கெராக்கான், பெர்ஜாசா மற்றும் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.