Home One Line P1 தஞ்சோங் பியாய்: சிங்கப்பூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு சிறப்பு முகப்பிடங்கள் ஏற்பாடு!

தஞ்சோங் பியாய்: சிங்கப்பூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு சிறப்பு முகப்பிடங்கள் ஏற்பாடு!

578
0
SHARE
Ad

பொந்தியான்: மலேசியா குடிநுழைவுத் துறையும், தேர்தல் ஆணையமும் ஒன்றிணைந்து நவம்பர் 16-ஆம் தேதி நடைபெற இருக்கு தஞ்சோங் பியாய் இடத் தேர்தலுக்காக சிங்கப்பூரில் பணிபுரியும் அல்லது வசிப்போருக்கான சிறப்பு வழியை வழங்குவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளன.

சுல்தான் இஸ்காண்டார் கட்டிடத்தில் உள்ள குடிநுழைவு முகப்பிடத்திலும், ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் அபுபாக்கர் வளாகத்திலும் சிறப்பு பாதை திறக்கப்பட உள்ளதாக குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ கைருல் சைமி டாவுட் மற்றும் தேர்தல் ஆணைய செயலாளர் டத்தோ முகமட் எலியாஸ் அபுபாக்கர் ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த சிறப்பு பாதை பேருந்து மற்றும் கார் போக்குவரத்தை பயன்படுத்தும் வாக்காளர்களுக்கு மட்டுமேஎன்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வெள்ளிக்கிழமைகளில் 24 மணி நேரமும், சனிக்கிழமைகளில் அதிகாலை 12.01 மணி முதல் மாலை 4 மணி வரை மணிநேரமும் இந்த முகப்பிடங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்காளர்களை அடையாளம் காணும் நோக்கத்திற்காக, தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு தகவல்களைக் கொண்ட வாக்காளர் பதிவு அட்டையை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அச்சீட்டை தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்திலிருந்தும் அச்சிடலாம். https: // p voting.spr.gov.my.

மேல் விபரங்களுக்கு வாக்காளர்கள் குடிநுழைவுத் துறையை 03-88801555 என்ற எண்ணிலும் அல்லது 03-88927018 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.