கோலாலம்பூர் – இந்திய அரசாங்கம், இந்தியாவில் இளங்கலை கல்வி மேற்கொள்ள விரும்பும் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளிகள் (PIOs), வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) மற்றும் மலேசியாவில் பணி புரியும் இந்திய நாட்டவர்களின் பிள்ளைகளுக்கு 2019-20ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்பான பிற கல்விகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது.
தகுதி
2. அக்டோபர் 1, 2019ஆம் வரை 17 முதல் 21 வயது நிரம்பியவர்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 1, 1997-க்குப் பின் மற்றும் அக்டோபர் 1, 2001-க்கு முன் பிறந்தவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகை விண்ணப்பத்திற்குத் தகுதியானவர்கள்.
இந்திய வம்சாவளி (PIOs) விண்ணப்பதாரர்கள்
3. இந்திய வம்சாவளி (PIOs) விண்ணப்பதாரர்கள் அவர்களின் OCI அட்டையை ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் தாங்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தாம் என்ற உறுதிச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் யாவும் இந்தியத் தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வெளிநாடு வாழ் (NRIs) விண்ணப்பதாரர்கள்
4. வெளிநாடு வாழ் (NRIs) விண்ணப்பதாரர்கள் கடந்த 6 வருடங்களில் (66 நாடுகளில் ஏதேனில் ஒன்றில்) சுமார் 3 வருடங்கள் வெளிநாட்டில் கல்வியை மேற்கொண்டிருக்க வேண்டும். மேலும், வெளிநாட்டு தகுதி (11&12ஆம் வகுப்பு அல்லது அதற்கு சம மதிப்புள்ள) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோர்கள் கடந்த 2 வருடமாக அயல் நாட்டில் வேலை செய்து வருகிறார்கள் என்ற ஒரு உறுதிமொழி பத்திரத்தை (இந்தியத் தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும்.
5. ஈ.சி.ஆர் (ECR) நாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் பிள்ளைகளான வெளிநாட்டில் படிக்கும் விண்ணப்பதாரர்கள் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு ஈ.சி.ஆர் நாட்டில் குறைந்தது 3 ஆண்டுகள் கல்வியைப் படித்திருக்க வேண்டும். மேலும், வெளிநாட்டு தகுதி (11 & 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு சம மதிப்புள்ள) தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோர்கள் கடந்த 2 வருடமாக ஈ.சி.ஆர் நாட்டில் வேலை செய்து வருகிறார்கள் என்ற ஓர் உறுதிமொழி பத்திரத்தைச் (இந்தியத் தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோர்களின் வேலை அனுமதிப் பத்திரத்தின் நகலையும் (இந்தியத் தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்) உடன் சமர்ப்பிக்க வேண்டும்.
6. விண்ணப்பதாரர்கள் கீழ்வரும் ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தால் SPDC விண்ணப்பிக்க தகுதியானவர்கள்;-
i. இந்திய மத்திய பல்கலைக்கழகம் இளங்கலை படிப்பு;
ii. தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) அங்கீகாரம் பெற்ற மற்றும் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ‘ஏ’ தர கல்வி நிலையங்கள்;
iii. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி), திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளிகள் மற்றும் தசா (DASA) திட்டத்தின் மூலம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி).
கல்வி தகுதிகள்
7. விண்ணப்பதாரர்கள், 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு சம மதிப்புள்ள; அதாவது இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தேர்வுகளில் 60 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே இவ்விண்ணப்பத்திற்குத் தகுதியானவர்கள். இவற்றில் மறுதேர்வில் அமர்ந்து எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படாது.
8. இந்தியாவில் நியமிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை படிபப்புக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பிற தகுதிகளை பூர்த்தி செய்தவர்கள் SPDCக்கு விண்ணப்பிக்கலாம். அதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் உட்பட அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களின் நுழைவுக் கடிதம், அதிகாரபூர்வ முத்திரையிடப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை spdcindia.gov.in எனும் SPDC அகப்பக்கத்தில் சமர்பிக்க வேண்டும்.
வருமான தகுதிகள்
9. இந்திய வம்சாவளி (PIO) மற்றும் வெளிநாடு வாழ் (NRI) விண்ணப்பதாரர்களின் பெற்றோர்களின் மாதச் சம்பளம் US$ 5,000 அல்லது அதற்கு மேற்போகாமல் இருக்க வேண்டும். இந்தியத் தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதலாளிமார்கள் கையொப்பமிட்ட மாதச் சம்பளத்தின் சான்றிதழும், வருடாந்திர வருமான வரி சான்றிதழையும் உடன் சமர்ப்பிக்க வேண்டும்.
10. விண்ணப்பதார்ர்கள் யாரேனும் பிற உதவித்தொகை/ நிதியுதவி / மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கீழ் ஏதேனும் நிதியுதவி பெறுவோர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள் இதுகுறித்த ஓர் உறுதி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.
தேர்வு தகுதிகள்
11. ‘மெரிட்’ அடிப்படையில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும். spdcindia.gov.in என்ற அகப்பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தேவையான ஆவணங்களோடு (ஸ்கேன் பிரதி) நவம்பர் 30, 2019குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளிவிவகார அமைச்சின் வலைத்தளத்தில் (MEA) வெளியிடப்படும். பெயர் பட்டியல் வெளியிட்டு 7 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு மின்னஞ்சல் மூலம் தங்களின் ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டும்.
நிதி உதவி
12. முதல் ஆண்டில், பொருளாதார செலவில் (IEC) 75% பகுதி நிதி உதவியை அதிகபட்சம் 3,600 முதல் 4,000 அமெரிக்க டாலர் வரை வழங்கப்படுகிறது. IECயில் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் பிற நிறுவன கட்டணங்கள் ஆகியவை அடங்கும். (உணவுக் கட்டணம் உட்படுத்தப்படவில்லை).
இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில், உதவித்தொகை விண்ணப்பதாரரின் மதிப்பெண்களைப் பொறுத்து அமையும். மேலும் விவரங்களுக்கு, முழுமையான SPDC வழிகாட்டி 2019-20-யை சரிபார்க்கவும்.