Home One Line P1 “ஊழல், நிதிக் குற்றங்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி முக்கியத்துவம் அளித்து வருகிறது!- மகாதீர்

“ஊழல், நிதிக் குற்றங்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி முக்கியத்துவம் அளித்து வருகிறது!- மகாதீர்

575
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஊழல் மற்றும் நிதிக் குற்றங்களை சட்ட அமலாக்கத்தின் மூலம் எதிர்ப்பதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

பெரிய அளவிலான ஊழல் வழக்குகள் தற்போதைக்கு எதுவும் இல்லை என்றும், அதே நேரத்தில் சிறிய அளவிலான ஊழல்களும் குறைந்துவிட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், அரசாங்கம் தனது அறிக்கையின் அனைத்து வாக்குறுதிகளையும் கட்டம் கட்டமாக நிறைவேற்றும் என்பதை தெளிவுப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

முன்னுரிமை ஊழல் விவகாரங்களுக்கு வழங்கப்பட்டது. நாங்கள் ஊழல் தொடர்பாக நிறைய சட்டங்களை இயற்றியுள்ளோம்.  ஊழல் தொடர்பான புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம், ஏனெனில் நாங்கள் அதனை தீர்ப்பதில் தீவிரமாக இருக்கிறோம்.”

எங்களுக்கு கிடைத்த அறிக்கைகளின்படி, பெரிய ஊழலின் அறிகுறிகள் நீங்கிவிட்டன. ” என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

பெரும்பாலான வாக்குறுதிகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன, ஆனால் மீதமுள்ளவற்றை நிறைவேற்ற இன்னும் நேரம் உள்ளது என்று அவர் கூறினார்.

நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு உறுதியளித்தோம். இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகவில்லை. ஆனால், நாங்கள் நிறைவேற்றிய விவகாரங்கள் உள்ளன. இன்னும் முழுமையாக நிறைவேற்ற நேரம் இருக்கிறது, ”என்று அவர் கூறினார்.