கோலாலம்பூர்: டாக்டர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு அனுப்ப முடியாத தமது நிலைப்பாட்டை விளக்கி, வெளியுறவு அமைச்சு இந்திய அரசுக்கு ஓர் அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
அக்கடிதத்திற்கு பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்க அரசாங்க தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ தோமி தோமஸுடன் கலந்துரையாட இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
“இது விவகாரமாக இந்திய அரசு கோரிக்கைவிடுத்திருந்தது. நாம் ஏன் டாக்டர் ஜாகிரை திருப்பி அனுப்பவில்லை என்று பிரதமர் மகாதீர் இந்திய தரப்பிடம் தெரிவித்துவிட்டார்” என்று அவர் குறிப்பிட்டார்.
“கடந்த வாரம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை 35-வது ஆசியான் உச்சமாநாட்டின் போது சந்தித்துப் பேசினேன். அவர் முறையாக தங்களுக்கு எங்களுக்கு உத்தியோகபூர்வ பதில் கடிதத்தை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்,” என்று அவர் நேற்று வியாழக்கிழமை மக்களவையில் கூறினார்.