தினகரனின் தீவிர ஆதரவாளராக இயங்கி வந்ததோடு, தொலைக் காட்சி விவாதங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பங்கேற்று அமமுகவையும் தினகரனையும் தற்காத்தும் ஆதரித்தும் வந்த புகழேந்தி அணியினர், மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவது தினகரனுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, பல முக்கியத் தலைவர்கள் அமமுகவிலிருந்து விலகி திமுகவிலும், அதிமுகவிலும் இணைந்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து புகழேந்தியும் அத்தகைய முடிவை எடுத்து அதிமுகவில் இணைவது எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவத்திற்கு அதிகரித்துவரும் ஆதரவைப் புலப்படுத்துவதாக இருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.