அண்மையில் திரையரங்கங்களில் வெளிவந்த மகாமுனி, பக்ரீத், வைரஸ் மற்றும் மெய் போன்ற புத்தம் புதிய திரைப்படங்களை எந்தவொரு விளம்பர இடைவெளியின்றி இம்மாதம் அஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241) -இல் கண்டு மகிழலாம்.
மகாமுனி (1/11/2019 – 28/11/2019)
இரண்டு கதைகள் கொண்ட இத்திரைப்படத்தில் ஒன்று, காஞ்சிபுரத்தில் வசிக்கும் மகா என்கிற மகாலிங்கத்தைச் சுற்றி நிகழ்கிறது. இன்னொன்று, ஈரோட்டில் வசிக்கும் முனி என்கிற முனிராஜைச் சுற்றி நடக்கிறது.
கார் ஓட்டுனராக வலம் வரும் மகா, தன்னுடைய மனைவியாக நடிக்கும் இந்துஜா மற்றும் குழந்தையுடன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வருகிறார். மகா அடியாளாக கொலை செய்யும் வேலைக்கு கூலிப்படையாக ஏவப்படுகிறார். இதற்கிடையில் ஏதோ ஒரு காரணத்திற்காக மகாவைக் கொல்ல பெரிய திட்டம் போடப்படுகிறது. இறுதியில் மகா உயிர் ஆபத்தில் இருந்து தப்பித்தாரா? அவரைக் கொலை செய்ய முயற்சி செய்யும் காரணம் என்ன? முனி என்ன ஆனார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.
பக்ரீத் (8/11/2019 – 5/12/2019)
அந்த ஒட்டகத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக, இனி இதை இங்கு வளர்க்க முடியாது, ராஜஸ்தான் சென்று இந்த ஒட்டகத்தை நல்ல இடத்தில் விடவேண்டும் என விக்ராந்த் கிளம்புகிறார். ராஜஸ்தான் கொண்டு சேர்த்தாரா? வழியில் என்னென்ன சிரமங்களை அவர் சந்தித்தார்? பிரிவால் விக்ராந்த் குடும்பம் என்னானது? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.
வைரஸ் (15/11/2019 – 12/12/2019)
மேலும் ரேவதி, ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
மெய் (22/11/2019 – 19/12/2019)
அதைக் கண்டுபிடித்துவிடும் இத்திரைப்படத்தின் கதாநாயகன் சந்தித்த விளைவுகள் என்ன என்பதுதான் கதையாகும்.
அஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241) -இல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு புதிய திரைப்படம் ஒளியேறும். இப்பொழுதே இந்த அலைவரிசையை வாங்கி இத்திரைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்.