Home One Line P2 சூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”

சூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”

904
0
SHARE
Ad

சென்னை – வரிசையாக அடுத்தடுத்து, என்ஜிகே, காப்பான் என தோல்விப் படங்களையே தந்து வரும் நடிகர் சூர்யா அடுத்து மிகவும் எதிர்பார்க்கும் படம் ‘சூரரைப் போற்று’.

வித்தியாசமான தலைப்பைக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை சுதா கொங்கரா என்ற பெண் இயக்குநர் இயக்கி வருகிறார். ஏற்கனவே, மாதவன் நடிப்பில் ‘இறுதிச் சுற்று’ என்ற வெற்றிப் படத்தை தந்தவர் இவர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சூர்யாவின் படத்தை அவர் இயக்குவதால், கடுமையாக உழைத்தாலும் அடுத்தடுத்து தோல்விப் படங்களாகவே அமைந்து வரும் சூர்யாவுக்கு திருப்பு முனையாக இந்தப் படம் அமையலாம் என்ற நம்பிக்கை அவரது இரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தனது கட்டான உடலமைப்பைக் காட்டும் விதத்தில் சூர்யா எகிறிக் குதிக்கும் இந்தத் தோற்றம் வெளியான ஓரிரண்டு நாட்களில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை டுவிட்டர் தளத்தில் பகிரப்பட்டு புதிய சாதனை புரிந்திருக்கிறது ‘சூரரைப் போற்று’ முதல் தோற்றக் காட்சி.