Home One Line P1 காலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது!

காலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது!

635
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2017 முதல் கடந்த ஆகஸ்ட் 31 வரையிலும் காலமான 348,098 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் அழித்துள்ளதாக பிதரமர் துறை துணை அமைச்சர் முகமட் ஹானிபா மைடின் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 31 வரை இறந்த 91,154 வாக்காளர்களின்  பெயர்களும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“2017-ஆம் ஆண்டில், இறந்த 179,118  வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து அழிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2018-ஆம் ஆண்டில் 117, 826 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனஎன்று அவர் இன்று புதன்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தேர்தல் பட்டியலில் இருந்து குடியுரிமை இழந்த அல்லது குடியுரிமை இழந்தவர்களின் பெயர்களையும் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என்று ஹானிபா குறிப்பிட்டார்.

பதிவுகளின்படி, 2017-ஆம் ஆண்டில், குடியுரிமை அந்தஸ்தை இழந்த 11,799 வாக்காளர்களின் பெயர்களும் , 2018-இல் 3,496 பேர்களும், ஜனவரி முதல் ஆகஸ்ட் 31 வரையில் 3,940 பெயர்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தரவின் புதுப்பிப்பு தேசிய பதிவு இலாகாவின் (ஜேபிஎன்) ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.