Home One Line P1 மலேசிய முன்னோடி இலக்கியவாதி மா.இராமையா காலமானார்!

மலேசிய முன்னோடி இலக்கியவாதி மா.இராமையா காலமானார்!

1109
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: நாட்டின் முன்னோடி இலக்கியவாதியான மா.இராமையா இன்று காலை தங்காக்கில் காலமானதாக மலேசிய எழுத்தாளர் சங்கம் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

86 வயதுடைய அவருக்கு அண்மையில் (நவம்பர் 9), அவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி தமிழ் எழுத்தாளர் சங்கம் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த 1946-ஆம் ஆண்டுகாதல் பரிசுஎன்ற முதல் கதையை எழுதியதன் வழியாக அவர் மலேசியத் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு அறிமுகமானார்.

#TamilSchoolmychoice

ஒன்பது நாவல்கள் உட்பட ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு, இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் ஆகியவற்றை மா.இராமையா எழுதியுள்ளார்

இலக்கியக் குரிசில்என்ற சிற்றிதழையும் சில ஆண்டுகள் மாத இதழாக நடத்தி வந்துள்ளார். இதனால், இவர் இலக்கியக் குரிசில் மா.இராமையா என்று பரவலாக அழைக்கப்பட்டார்.

அன்னாரின் நல்லுடல் நாளை (நவம்பர் 14) காலை 10.30 மணிக்கு தங்காக்கிலுள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும்.