கோலாலம்பூர் – அனைத்து மலேசியர்களும் அஸ்ட்ரோவின் புதிய அல்ட்ரா பாக்ஸ் வாயிலாக தற்போது சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறலாம். இந்த அல்ட்ரா அனுபவம் 4K UHD, கிளவுட் ரெக்கார்டிங் (cloud recording), பல சாதனைகளின் திரைகள் வாயிலாக ஒருங்கிணைந்த புதிய இடைமுகம் (inter-face), மேம்படுத்தப்பட்ட உள்ளடக்க பரிந்துரைகள் மற்றும் ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் திறன் என பலமுனைகளிலான சிறப்புகளைக் கொண்டவையாகும்.
இவை அனைத்தும் புதிய அல்ட்ரா பெட்டி (செட்-அப் பாக்ஸ்) மற்றும் அஸ்ட்ரோ கோ-வில் கிடைக்கும். அதே வேளையில், விளையாட்டு இரசிகர்கள் இந்த அல்ட்ரா பாக்ஸ் கொண்டு மலேசியாவில் முதல் 4K UHD அனுபவத்தில் UEFA EURO 2020, the Premier League, Formula 1 மற்றும் La Liga ஆகிய நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்.
அஸ்ட்ரோவின் அல்ட்ரா பாக்ஸ் புதிய அணுக்கப் பெட்டியின் அறிமுக விழா இன்று புதன்கிழமை பிற்பகலில் பெட்டாலிங் ஜெயா சன்வே பிரமிட் பேரங்காடியில் கோலாகலமாக நடைபெற்றது.
4K UHD என்பது தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டப் பாய்ச்சலாகும். தற்போது இருக்கும் எச்.டி. என்ற துல்லிய ஒளிபரப்பைவிட அதி துல்லிய ஒளிபரப்பைக் கொண்ட தொழில்நுட்பம் என்பதோடு, தற்போது தயாரித்து வெளியிடப்படும் புதிய தொலைக் காட்சிப் பெட்டிகள் அனைத்தும் 4K தொழில்நுட்பத்தோடு, மிகத் தெளிவான ஒளிபரப்பும் தன்மையோடு வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய திட்டம் குறித்து அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹென்ட்ரி டான் கூறுகையில், “வாடிக்கையாளர் சேவை, உள்ளடக்கம், OTT போன்றவற்றில் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க தொடர்ச்சியான பயணத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இன்று ஒரு புதிய மைல்கல் – அல்ட்ரா பாக்ஸ் பொழுதுபோக்கை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்கிறது. அவ்வகையில், 4K UHD, கிளவுட் ரெக்கார்டிங் (cloud recording), Play from Start மற்றும் புதிய இடைமுகம் கொண்டு பெரிய திரையில் பொழுதுபோக்கை மேம்படுத்துகின்றது. ஆகவே, வாடிக்கையாளர்கள் தங்களின் அல்ட்ரா பாக்ஸ் மேம்படுத்தி புதிய அனுபவத்தைப் பெறலாம். இந்த அல்ட்ரா அனுபவத்தை அஸ்ட்ரோ கோ செயலியில் அனைத்து வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுபவிக்கலாம். இதனை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்களுடைய விருப்ப நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்” என்று குறிப்பிட்டார்.

மேலும் ஹென்ட்ரி கூறுகையில், “அரை மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் 4K தொலைக்காட்சி உள்ளது. அதில் 70% அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அடங்குவர். இந்த அல்ட்ரா பாக்ஸின் வெளியீடு தற்போது வளர்ச்சி கண்டு வரும் 4K UHD தேவையைப் பூர்த்தி செய்ய சரியான தருணமாகும். அதுமட்டுமின்றி, உபசரிப்பு, சில்லறை வர்த்தகம், உணவு-பானங்கள் துறைகள் 4K UHD-இல் நேரடி விளையாட்டு மற்றும் பிற உள்ளடக்கங்களை ஒளிபரப்ப வாய்ப்புகள் வரவேற்கப்படுகின்றது” என்றார்.
அல்ட்ரா பாக்ஸ் செயற்கைக்கோள் மற்றும் இணைய தொழில்நுட்பங்களின் கலப்பின முறையைப் பயன்படுத்துகிறது. செயற்கைக்கோள் சிறந்த 4K UHD தரத்தை வழங்குகின்றது. அதுமட்டுமின்றி, அல்ட்ரா பாக்ஸ் இணையத்துடன் இணைத்து நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் வாயிலாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் கண்டு மகிழலாம். அதோடு, அஸ்ட்ரோ பலதரப்பட்ட பொழுதுபோக்கு மற்றும் பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது.

அல்ட்ரா பாக்ஸ் மற்றும் அஸ்ட்ரோ கோ வாயிலாக ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற புதிய பயனர் இடைமுகத்துடன், வாடிக்கையாளர்கள் பின்வரும் மேம்படுத்தப்பட்ட பார்க்கும் அனுபவத்தை அனுபவிக்கலாம்.
Astro Cloud Recording : புதிய அல்ட்ரா பாக்ஸ் மற்றும் அஸ்ட்ரோ கோ-வில் கிடைக்கும். இதன் வழி, வாடிக்கையாளர்கள் அல்ட்ரா பாக்ஸ் அல்லது அஸ்ட்ரோ கோ-வில் ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து, அதனை கிளவுட் சேமிப்புக் கிடங்கில் வைத்து எப்பொழுது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும், எந்தத் திரையில் வேண்டுமென்றாலும் கண்டு களிக்கலாம். வாடிக்கையாளர்கள் 200 மணிநேர எச்டி பதிவுகளை இலவசமாகவும் மாதம் 15 ரிங்கிட் செலுத்தி 1500 மணிநேரம் வரை நிகழ்ச்சிகளையும், படங்களையும் பதிவு செய்யலாம்.
Play from Start: நடுவில் இடைநிறுத்தம் செய்த ஒரு நிகழ்ச்சியை தொடக்கத்திலிருந்து காண ‘restart‘ பட்டனை கிளிக் செய்யலாம்.
New Home Screen: எளிதில் உள்ளடக்கங்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது. ‘Store’-யில் உள்ள நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் எந்தவொரு கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.
Discover and Stream VOD: அல்ட்ரா பாக்ஸ் இணையத்துடன் இணைத்து 50,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் அல்லது அஸ்ட்ரோ கோ-வில் கண்டு மகிழலாம்.
Search: தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், நேரடி உள்ளடக்கம் மற்றும் உங்கள் பதிவுகளின் உள்ளடக்கங்களைக் கண்டுபிடிப்பதை மிகவும் எளிதாக்குகிறது.
Multi-screen and Stop Here, Continue There: நீங்கள் ஒரு திரையில் இடைநிறுத்தம் செய்த நிகழ்ச்சியை மற்றொரு திரையில் வேறு இடத்தில் கண்டு களிக்கலாம்.
100 ரிங்கிட்டுக்கு மேல் கட்டண சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக அல்ட்ரா பாக்ஸ் அணுக்கப் பெட்டிக்குமேம்படுத்திக் கொள்ளலாம்.
மாதாந்திரமாக 100 ரிங்கிட்டுக மேல் கட்டண சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக அல்ட்ரா பாக்ஸ் இணைப்புக்கு மேம்படுத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் அல்ட்ரா பாக்ஸ் இணையத்துடன் இணைத்து 50,000 க்கும் மேற்பட்ட ஆன் டிமாண்ட் நிகழ்ச்சிகள், கிளவுட் ரெக்கார்டிங், மற்றும் பல நன்மைகள் பெறலாம். 4K UHD பார்வையை அனுபவிக்க, வாடிக்கையாளர்களுக்கு இணக்கமான 4K தொலைக்காட்சியைக் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தொகுக்கப்பட்ட சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் அஸ்ட்ரோ & அகண்ட அலைவரிசையுடன் (பிராட்பேண்டுடன்) இணைக்கப்படலாம்.
விலை குறித்த தகவல்களை கீழ்காணும் அட்டவணையில் காணலாம்.
அல்ட்ரா பாக்ஸ் நிறுவல் கட்டணம் | தற்போதைய வாடிக்கையாளர் | புதிய வாடிக்கையாளர் |
மாதாந்திர பேக் சந்தா கட்டணம் ≥ RM100 | இலவசம் | RM99 |
மாதாந்திர பேக் சந்தா கட்டணம் < RM100 | RM199 |
மேல் விவரங்களுக்கு 03 7490 8000 எண்களுக்கு அழைக்கலாம் அல்லது www.astro.com.my/ultra அகப்பக்கத்தை வலம் வருங்கள். #AstroUltra என்ற ஹேஷ்டேக் உடன் சமூக ஊடகங்களில் அல்ட்ரா பாக்ஸ் குறித்த உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள்.