Home One Line P2 16.3 மில்லியன் இரசிகர்களைக் கொண்டு அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை

16.3 மில்லியன் இரசிகர்களைக் கொண்டு அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை

1540
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையில், GfK நிறுவனம் மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவை கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அஸ்ட்ரோ வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து 16.3 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கிறது.

வாரந்தோறும் 79% சதவித அதாவது  16.3 மில்லியன் ரசிகர்கள் அஸ்ட்ரோ வானொலியின் 9 வானொலி நிலையங்களைக் கேட்கின்றார்கள் என்று கருத்துக் கணிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்ட்ரோ வானொலியின் எரா, ஹிட்ஸ், மை மற்றும் ராகா முறையே மலாய், ஆங்கிலம், சீன, தமிழ் மொழிகளில் தொடர்ந்து முதல் நிலை வானொலி நிலையம் எனும் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அவ்வகையில், மலேசியாவின் முதல் நிலை மலாய் வானொலி எரா தற்போது வாரந்தோறும் 6.7 மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதைத் தவிர்த்து, ராகாவின் கலக்கல் காலை மற்றும் மதிய நிகழ்ச்சியைக் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது வாரந்தோறும் 1.5 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு நம்  நாட்டின் முன்னணி தமிழ் வானொலி எனும் இடத்தைத் தக்க வைத்துள்ளது.

அஸ்ட்ரோவின் ஆங்கில வானொலிகளான ஹிட்ஸ், மிஸ்க் மற்றும் லைட் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

“அஸ்ட்ரோ வானொலி அனைத்து வகையிலும் 16.3 மில்லியன் ரசிகர்களுக்கு எங்களுடைய வானொலியின் முழுமையான பிராண்ட் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்து வருகிறோம். அவ்வகையில், எங்களுடைய சமூக வலைத்தளங்கள் 19.5 மில்லியன் ரசிகர்களும் மாதாந்திர 13.8 மில்லியன் மின்னுட்பம் வழியான பகிர்தல் (டிஜிட்டல் ஸ்ட்ரீம்) செய்வதோடு மட்டுமின்றி எங்களுடைய டிஜிட்டல் அகப்பக்கங்களை சுமார் 5.1 மில்லியன் பேர் மற்றும் 110 மில்லியன் பேர் காணொளிகள் மூலம் ஒவ்வொரு மாதமும் கண்டு களிக்கின்றார்கள். வானொலி இன்றும் அனைத்து தளங்களிலும் முக்கிய ஊடகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஆகவே, மலேசிய மக்கள் தொகையின் அனைத்து பிரிவுகளிடமும் கொண்டு சேர்ப்பதில் உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுகிறது” என அஸ்ட்ரோவின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.