Home One Line P2 ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விரைவில் விற்பனை செய்யப்படும்

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விரைவில் விற்பனை செய்யப்படும்

917
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவின் மிகப் பெரிய முன்னணி நிறுவனங்களான ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தையும் விரைவில் இந்திய அரசாங்கம் தனியாருக்கு விற்பனை செய்யும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (படம்) அறிவித்துள்ளார்.

இந்த இரண்டு நிறுவனங்களும் அரசு சார்பு நிறுவனங்களாகத் தற்போது செயல்பட்டு வருகின்றன.

இந்த விற்பனைகளின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்திய அரசாங்கம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த இரண்டு நிறுவனங்களின் விற்பனை நடைமுறைகள் நடைபெற்று முடியும் என எதிர்பார்ப்பதாகவும் நிர்மலா கூறினார்.