Home One Line P1 தஞ்சோங் பியாய்: “இந்த அளவிற்கு வீழ்த்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை!”- மகாதீர்

தஞ்சோங் பியாய்: “இந்த அளவிற்கு வீழ்த்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை!”- மகாதீர்

1355
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தனது கூட்டணி தோல்வியடையும் என்று தாம் எதிர்பார்த்ததாக நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டார்.

இருப்பினும், இந்த அளவிற்கு தோற்கடிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

தஞ்சோங் பியாய் மக்கள் எடுத்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும், எதிர்கட்சியினர் பெரும்பான்மையில் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். 2,000 பெரும்பான்மை வாக்குகளை தாண்டாது என்று நான் கணித்திருந்தேன். இருப்பினும், அதிகாரப்பூர்வ முடிவுகள் 15,086 வாக்குகள் என்று காட்டியது,” என்று மகாதீர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்

#TamilSchoolmychoice

அனைத்து கூட்டணி கட்சிகளும் என்ன தவறு நடந்தன என்பதை விரிவான, தீவிரமான மற்றும் நேர்மையான மதிப்பீட்டை நடத்தும் என்று அவர் உறுதியளித்தார்.

பிரச்சாரத்தின்போது அனைத்து கட்சி ஆர்வலர்களும் செய்த பணிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று, தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் தற்போதைய மத்திய அரசுக்கு மிக மோசமான நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவினை வழங்கினர்.

நம்பிக்கைக் கூட்டணி வெறும் 26.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. இதற்கு நேர்மாறாக, தேசிய முன்னணி 65.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. பலர் இம்முறை நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு பிரதமர் மகாதீர்தான் காரணம் என்று கூறி அவரை பதவி விலகுமாறு கருத்து தெரிவித்துவரும் நிலையில், கூட்டணிக் கட்சிகள் அதனை மறுத்து கருத்துகள் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.