பெங்களூரு – தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப் பறக்கும் இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் வேலை இழப்பர் என அந்தத் துறைசார்ந்த நிபுணர்களில் ஒருவரான டி.வி.மோகன்தாஸ் பய் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
மோகன்தாஸ் முன்பு தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரம்மாண்ட நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தில் நிதித் துறை தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர் ஆவார்.
இருப்பினும் இந்த வேலைவாய்ப்பு இழப்பு என்பது சாதாரணமானது என்றும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற வேலைவாய்ப்பு இழப்புகளின் மூலம் அந்தத் துறை தன்னைத் தானே உருமாற்றிக் கொள்ளும் என்றும் மோகன்தாஸ் மேலும் கூறினார்.
வேலை இழப்பவர்களில் பெரும்பாலோர் நடுத்தர நிலையில் பணிபுரியும் பணியாளர்களாக இருப்பர் என்றும் மோகன்தாஸ் தெரிவித்திருக்கிறார்.