Home கலை உலகம் தேசிய விருது பெற்ற ‘ஹமீத்’ திரைப்படம் அஸ்ட்ரோவில் ஒளியேறுகிறது

தேசிய விருது பெற்ற ‘ஹமீத்’ திரைப்படம் அஸ்ட்ரோவில் ஒளியேறுகிறது

833
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 66-வது தேசிய விருது விழாவில் ‘ஹமீத்’ திரைப்படத்திற்கு ‘சிறந்த உருது’ படம் எனும் விருது கிடைத்தது. நவம்பர் 14-ஆம் தேதி தொடக்கம் ‘ஹமீத்’ திரைப்படம் அஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் ஒளியேறி வருகிறது.

அந்தப் படத்துடன் ‘பாரத்’, ‘ஜட்ஜ்மென்டைல் ஹை கியா’ மற்றும் ‘காலா ஷா காலா’ போன்ற திரைப்படங்களும் இம்மாதத்தில் ஒளியேறுகின்றன.

‘ஹமீத்’ – (14/11/2019 – 12/12/2019)

#TamilSchoolmychoice

அமின் பட்டின் நாடகமான ‘போன் நம்பர் 786’ என்ற கதையைத் தழுவி ‘ஹமீத்’ திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் அய்ஜஸ் கான். காஷ்மீரின் பள்ளத்தாக்குகளில் வசிக்கும் சிறுவன் ஒருவன், தன் தந்தை தொலைந்துபோன காரணத்தால் அல்லாஹ்விடம் பேச முற்படுகிறான். அந்தச் சிறுவன், ‘786’ என்ற எண்ணுக்கு கடவுளிடம் பேச தொலைபேசியில் அழைக்கிறான்.

ஆனால், மறுமுனையில் சிஆர்பிஎஃப் ஜவான் அபயாக நடித்துள்ள விகாஷ் குமார் பேசுகிறார். இத்திரைப்படம் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் உறவையும் அங்கு பணிபுரியும் ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் துயரங்களையும் எடுத்து கூறுகின்றது.

இத்திரைப்படத்தில் ரசிகா துகல், தல்ஹா அர்ஷத் ரேஷி, விகாஷ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

‘பாரத்’ – (7/11/2019 – 5/12/2019)

நடிகர் சல்மான்கான் நடிப்பில் இயக்குநர் அலி அப்பாஸ் ஷாஃபர் இயக்கத்தில் வெளிவந்த “பாரத்”, இவ்வாண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகும்.

இப்படத்தில் கத்ரினா கைஃப், தபு, ஜாக்கி ஷெரோஃப், திஷா பட்டானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் கதாநாயகன் தம்முடைய 8 வயதிலே என்ன நடந்தாலும் தனது குடும்பத்தை நன்றாக வைத்திருப்பேன் என்று தன் தந்தையிடம் வாக்குறுதி அளிக்கிறார். அந்த வாக்குறுதியை அவர் எவ்வாறு காப்பாற்றுகின்றார் என்பது இத்திரைப்படத்தின் கதையாகும்.

‘ஜட்ஜ்மென்டைல் ஹை கியா’ – (21/11/2019 – 19/12/2019)

பிரகாஷ் கோவேலமுடி இயக்கத்தில் கங்கனா ரணவத், ராஜ்குமார் ராவ் மற்றும் அமிரா தஸ்தூர் ஆகியோர் நடித்துள்ளார்கள். டப்பிங் கலைஞராக வலம் வரும் பாபி, தனது வீட்டின் ஒரு பகுதியை கேசவ் மற்றும் ரிமாவுக்கு வாடகைக்கு விடுகிறார்.

திடீரேன ஒரு கொலை சம்பவம் நிகழ்கின்றது. இக்கொலையில் கேசவுக்கு ஒரு பங்கு இருப்பதாக பாபி சந்தேகம் கொள்கிறார். கேசவ் உண்மையான கொலைக்காரன் இல்லையா என்பது இத்திரைப்படத்தின் மீதிக் கதையாகும்.

‘காலா ஷா காலா’ – (28/11/2019 – 28/12/2019)

இத்திரைப்படத்தின் கதாநாயகன் அழகான காதல் வாழ்க்கைக்காக போராடுகிறான். அவருக்கு அந்த காதல் வாழ்க்கை அமைகின்றதா இல்லையா என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.

அமர்ஜித் சிங் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘காலா ஷா காலா’ திரைப்படத்தில் பின்னு தில்லான், சர்குன் மேத்தா, நிர்மல் ரிஷி மற்றும் கரம்ஜித் அன்மோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

அஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9 மணிக்கு புதிய திரைப்படம் ஒளியேறும். இத்திரைப்படங்களை ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு மகிழலாம்.