Home One Line P1 யுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு

யுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு

935
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“தொடர்ந்து பல சாதனைகளை நம் பிள்ளைகள் பெறவேண்டும். ம.இ.கா என்றும் இந்திய சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபடும். தேசிய அளவில் பெருமை சேர்த்திருக்கும் நம் பிள்ளைகளின் விடா முயற்சியைத் தாம் பாராட்டுகிறேன். அதே வேளையில் பிள்ளைகளின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”  என அறிக்கை ஒன்றின் வழி நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் கூறினார்.

கல்வி ஒன்றின் வழியே மட்டும்தான் ஒருவரின் வாழ்க்கை உயர்ந்த நிலையை அடையும். எனவே கல்வி கற்ற சமுதாயமாக நம் சமுதாயம் விளங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யுபிஎஸ்ஆர் தேர்வில் சாதித்த சாதனைகள் இந்திய சமுதாயத்தை தலைநிமிரச் செய்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆற்றலை வெளிக்காட்டுறது” என்றும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.