கோலாலம்பூர்: துன் ரசாக் எக்ஸ்சேஞ்சில் (டிஆர்எக்ஸ்) முதல் குடியிருப்பு திட்டமான கோர் ரெசிடென்ஸ்ஸில் (Core Residence) தற்போது 624 முதல் 1,022 சதுர அடி வரையிலான அலகு வீடுகளுக்கு, 1.3 மில்லியன் முதல் 2.2 மில்லியன் ரிங்கிட் வரையிலான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் மூன்று தொகுதிகள் உட்பட, 700 குடியிருப்பு பிரிவுகளை வழங்குகிறது.
ப்ரோஜெக் கோர் ப்ரிஷஸ் டெவலப்மெண்ட் செண்டெரியான் பெர்ஹாட் (Projek Core Precious Development Sdn Bhd) மேம்பாட்டுத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜாங் பாவ் கூறுகையில், குடியிருப்பு பிரிவுகளுக்கான விற்பனை விலை சதுர அடிக்கு 2,200 ரிங்கிட்டிலிருந்து தொடங்குவதாகக் கூறினார்.
ஐந்து நட்சத்திர தரமான வாழ்க்கை முறையை வழங்குவதில் சிறந்த வசதிகளுடன் கூடிய கோலாலம்பூரின் சின்னமான நகரக் காட்சியை அடிப்படையாகக் கொண்ட, இயற்கை விளக்குகள் மற்றும் காற்றோட்டம், இந்த வீடுகளில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“தென்கிழக்கு ஆசியா, மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், நெதர்லாந்து போன்ற அனைத்துலக மக்கள் இன்றைய கோர் குடியிருப்பு திறக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.”
“இது மலேசியாவில் எங்கள் முதல் திட்டம். மலேசியாவில் எங்களுக்கு இன்னும் பல திட்டங்கள் உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ், இந்தோனிசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலங்கையின் சில இடங்களிலும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன” என்று அவர் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.