புது டில்லி: மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் நீடித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
“பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸின் முடிவல்ல” என்று அவர் மீண்டும் கூறியுள்ளார்.
கட்சிக்கு எதிராக செயல்பட்ட அஜித்பவாருடன் தொடர்பில் இல்லை என்று கூறிய அவர், அஜித்பவாரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக தேவேந்திர பட்னாவிஸூம், அஜித்பவாரும் முதல்வர், துணை முதல்வராக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தலைமையில் கடந்த சனிக்கிழமை பதவியேற்றனர்.