Home One Line P2 தர்பார்: ‘சும்மா கிழி’ பாடல் காணொளி வெளியிடப்பட்டது!

தர்பார்: ‘சும்மா கிழி’ பாடல் காணொளி வெளியிடப்பட்டது!

1159
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கல் திருநாளுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் தர்பார். இப்படத்தின் குறுமுன்னோட்ட விளம்பரம் அண்மையில் வெளியிடப்பட்டு இரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.  தற்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலின் வரிகளைக் கொண்ட காணொளி நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.

சும்மா கிழி’ என்ற அப்பாடல் சமூக வலைதளங்களில் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு,  வெளியான ஒரு மணி நேரத்தில் யூடியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது

இப்பாடலை அனிருத் இசையில் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பாடலின் காணொளியைக் காணலாம்:

#TamilSchoolmychoice