Home One Line P2 டிசம்பர் மாதம் பாலிஒன் எச்டியில் புத்தம் புதிய பாலிவூட் திரைப்படங்கள்

டிசம்பர் மாதம் பாலிஒன் எச்டியில் புத்தம் புதிய பாலிவூட் திரைப்படங்கள்

1024
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டிசம்பர் மாதம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9 மணிக்கு பாலிவுட் இரசிகர்கள் அஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் புத்தம் புதிய இந்தி திரைப்படங்களைக் கண்டு மகிழலாம். அவ்வகையில், ‘ஜபரியா ஜோடி’ (Jabariya Jodi), ‘கோன் கேஷ்’ (Gone Kesh), ‘மலால்’ (Malaal) போன்ற திரைப்படங்கள் ஒளியேறவுள்ளன.

ஜபரியா ஜோடி (Jabariya Jodi)

பிரசாந்த் சிங் இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் பரினீத்தி சோப்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை டிசம்பர் 5-ஆம் தேதி தொடக்கம் கண்டு களிக்கலாம்.

அபய் எனும் கதைப்பாத்திரத்தில் வலம் வரும் கதாநாயகன் வரதட்சணை கோரும் மாப்பிள்ளைகளை வலுக்கட்டாயமாகக் கடத்தி சென்று பிறகு திருமண செய்து வைக்கிறார். அவரது குழந்தை பருவ காதலியான பாப்லி, அபயின் வாழ்க்கையில் மீண்டும் நுழைந்து அவரை மாற்றுகிறார்.

கோன் கேஷ் (Gone Kesh)

#TamilSchoolmychoice

ஒருவரின் தோற்றம்தான் அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான தன்னம்பிக்கை, காதல் போன்றவற்றைத் தீர்மானிப்பதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், தலைமுடியை இழந்ததால் தன்னம்பிக்கையைத் தொலைத்துத் தவிப்பவர்கள் பலர்.

அறிமுக இயக்குநர் காசிம் கல்லோ, சமூகம் எதிர்கொள்ளும் இந்த ‘தலை’யாயப் பிரச்சினையே ‘கோன் கேஷ்’ (Gone Kesh) படத்தின் முக்கிய கதைக்கரு ஆகும். ஸ்வேதா திரிபாதி, தீபிகா அமின், விபின் ஷர்மா ஆகியோர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் டிசம்பர் 12-ஆம் தேதி தொடக்கம் ஒளியேறவுள்ளது.

‘மலால்’ (Malaal)

7ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக்காக மலால் படம், பத்மாவதி புகழ் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குனர் மங்கேஷ் ஹதாவலே இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஷர்மின் சேகல் நாயகியாகவும், மிஸ்ஸான் ஜஃப்ரின் நாயகனாகவும் நடித்துள்ள இத்திரைப்படத்தை டிசம்பர் 19-ஆம் தேதி தொடக்கம் கண்டு களிக்கலாம்.

அஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9 மணிக்கு புதிய இந்தித் திரைப்படம் ஒளியேறும். இத்திரைப்படங்களை ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு மகிழலாம்.