Home One Line P2 அஸ்ட்ரோ தங்கத்திரையில் டிசம்பர் மாதம் புத்தம் புதிய 4 திரைப்படங்கள்

அஸ்ட்ரோ தங்கத்திரையில் டிசம்பர் மாதம் புத்தம் புதிய 4 திரைப்படங்கள்

1045
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அஸ்ட்ரோ தங்கத்திரையில் டிசம்பர் மாதம் பப்பி, பெட்ரோமாக்ஸ், காவியன் மற்றும் மிக மிக அவசரம் போன்ற திரைப்படங்களை எந்தவொரு விளம்பர இடைவெளியுமின்றி அஸ்ட்ரோ தங்கத் திரையில் துல்லிய ஒளிபரப்பில் (எச்.டி அலைவரிசை 241) -இல் கண்டு மகிழலாம்.

பப்பி

கதாநாயன் வருண் வீட்டிற்கு மேலே குடிவருகிறார் நாயகி சம்யுக்தா. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்குகிறார்கள். நண்பர் யோகிபாபுவின் அறிவுரைப்படி சம்யுக்தாவிடம் தன்னுடைய காதலை சொல்லுகிறார். இருவரும் ஒன்றாகி சில நாட்களில் சம்யுக்தா கர்ப்பமாகிவிடுகிறார்.

வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என்று நினைக்கும் இவர்கள் எப்படி இந்த சூழ்நிலையை சமாளித்தார்கள் என்பதுதான் இப்படத்தின் கதையாகும். இயக்குனர் நட்டு தேவ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தை டிசம்பர் 6-ஆம் தேதி கண்டு களிக்கலாம்.

பெட்ரோமாக்ஸ்

#TamilSchoolmychoice

டிசம்பர் 13-ஆம் தேதி தொடக்கம் காமெடி கலந்து பேய் படமாக உருவாகியுள்ள பெட்ரோமாக்ஸ் படத்தில் தமன்னாவுடன் இணைந்து சத்யன், முனீஷ்காந்த், மைம் கோபி, லிவிங்ஸ்டன், பிரேம், காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

சென்னை அருகே உள்ள வீட்டில் பூர்வீக பேய்கள் வசிப்பதாகக் கூறி யாரும் பிரேம் வீட்டை வாங்க மறுக்கின்றனர். அந்த வீட்டில் 4 நாட்கள் தங்கி, அங்கு பேய்கள் இல்லை என்று நிரூபித்தால், அந்த வீட்டின் விலையில் 20 சதவீத கமிஷன் தருவதாக ராம்தாஸிடம் கூறுகிறார் பிரேம். சவாலை ஏற்கும் ராம்தாஸ் தன் 3 நண்பர்களுடன் அந்த வீட்டில் தங்குகிறார். இறுதியில், பிரேம் அந்த வீட்டை விற்க முடிந்ததா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதையாகும்.

காவியன்

ஷ்யாம் மோகன் இசையில் ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், சத்யன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை டிசம்பர் 20-ஆம் தேதி தொடக்கம் கண்டு களிக்கலாம். ஒய்ட் காலர் எனப்படும் உயர்தர வேலைகளில் இந்தியர்களின் அயராது உழைப்பு அமெரிக்கர்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால், அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஒரு வெறுக்கத்தக்க குற்றம் என்பதை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மிக மிக அவசரம்

பெண்கள் தங்களது தினசரி வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறித்து தயாரிக்கப்பட்ட ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தை டிசம்பர் 27-ஆம் தேதி தொடக்கம் கண்டு களிக்கலாம். சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா, ஹரிஷ், முத்துராமன், இ.ராமதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241) -இல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு புதிய திரைப்படங்கள் ஒளியேறும். இந்த அலைவரிசையை இதுவரை பெற்றிருக்காத சந்தாதாரர்கள் இப்பொழுதே இந்த அலைவரிசையை வாங்கி இத்திரைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்.