Home One Line P2 அஸ்ட்ரோவில் விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்

அஸ்ட்ரோவில் விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்

934
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அஸ்ட்ரோ கோ செயலியில் குழந்தைகளுக்காக 9,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நிறைந்து கிடக்கின்றன. இவ்வாண்டு பள்ளி விடுமுறையை முன்னிட்டு, குழந்தைகள் தங்களுடைய நேரத்தை நன்றாகப் பயன்படுத்தும் வகையில் குடும்ப மற்றும் நட்பை மையப்படுத்திய 9,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தற்போது அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் சேவையை அணுகி அஸ்ட்ரோ சந்தாதாரர்கள் கண்டு மகிழலாம்.

அவ்வகையில், அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ‘அள்ளுங்கள் வெல்லுங்கள்’ புத்தம் புதிய கேம் ஷோ, மோட்டு பட்லு, பொம்மி குட் டச் பேட் டச், ‘கிருஷ்ணா திரைப்படங்கள்’ ‘சூப்பர் ஸ்டார் ராஜா’ போன்ற நிகழ்ச்சிகள் ஒளியேறவுள்ளன.

அள்ளுங்கள் வெல்லுங்கள்

இப்போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்களைத் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறது.

மோட்டு பட்லு

#TamilSchoolmychoice

இது ஃபர்ஃபுரி நகரைச் சேர்ந்த மோட்டு மற்றும் பட்லு இரு கதாபாத்திரங்களின் கதையை மையப்படுத்திய அனிமேஷன் தொடராகும். மொத்தத்தில் ‘மோட்டு பட்லு’ குதூகலம் வழங்கும் படைப்பாகும்.

பொம்மி குட் டச் பேட் டச்

குழந்தைகளிடம் நல்லது மற்றும் கெட்டது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்கள் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்படும்.

கிருஷ்ணா திரைப்படங்கள்

கிருஷ்ணன் குழந்தையாக இருந்த போது செய்த லீலைகளை அவரின் வாழ்க்கை வரலாற்று போன்ற தகவல்களை இத்திரைப்படங்களில் கண்டு அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, நவம்பர் 23-ஆம் தொடக்கம் 50 -க்கும் மேற்பட்ட பிரத்தியேகமான நிகழ்ச்சிகளை Astro Ceria, Astro Ria, Astro Warna, Astro Prima, HBO, Fox Movies, Disney, Cartoon Network, Nickelodeon, Warner TV, Astro Xiao Tai Yang அலைவரிசைகளில் கண்டு மகிழலாம்.

அவ்வகையில், ‘Perisik Cilik’, ‘Misteri Krew: Harta Karun Jepun’, ‘Dumbo’, ‘Avengers: Endgame’, ‘Mickey Goes Local’, ‘Club Mickey Mouse Goes to Hong Kong Disneyland Special’, ‘Wizards of Warna Walk Special with the Mouseketeers’, ‘Olaf’s Frozen Adventure’, ‘We Bare Bears’, ‘SpongeBob SquarePants’ போன்ற நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்.

என்ன (நிகழ்ச்சிகள்) தேவை, எப்போது தேவை மற்றும் எங்கே தேவை ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் வசதியை ஆஸ்ட்ரோ கோ ஏற்படுத்திக் கொடுகின்றது.

ஆப் ஸ்டோர் (App Store) அல்லது கூகுள் ப்ளே (Google Play) செயலிகளின் மூலம் அஸ்ட்ரோ கோ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள் அல்லது astrogo.my அகப்பக்கத்தை வலம் வருங்கள்.