கோலாலம்பூர்: 2019-ஆம் ஆண்டுக்கான அம்னோ பொது மாநாட்டின் பிரதிநிதிகள் தங்கள் விமர்சனங்களை வெளிப்படுத்த எல்லா உரிமைகளும் உள்ளன, ஆனால் மத மற்றும் இன உணர்வுகளைத் தொடுவதைத் தவிர்க்குமாறு அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
பிரதிநிதிகள் உண்மைகளைப் பற்றி விவாதிக்க முடியும் என்பதையும், உணர்ச்சி ரீதியாக இனம் மற்றும் மதங்களைப் பற்றி பேச முடியாது என்பதையும் உறுதிப்படுத்த இதுபோன்ற தீர்மானம் முக்கியமானது என்று அவர் கூறினார்.
“அவர்கள் விமர்சிப்பதற்கு சுதந்திரம் உண்டு, மற்றவர்களை அல்லது மத, இன உணர்ச்சிகளைத் தொடுவதற்கு நாம் அனுமதிக்கவில்லை”
“ஏனென்றால், சபாவில் ஒரு அம்னோ பிரிவுத் தலைவர் பாதிரியாராக இருக்கிறார். அதனால்தான் நாங்கள் விமர்சிப்பதற்கு சுதந்திரம் வழங்கினாலும், எங்களுக்கு வழிகாட்டுதல்கள் உள்ளன.”
“தலைவர்களை விமர்சிக்க அனுமதி உள்ளது, ஆனால் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்” என்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
நேற்று புதன்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு அம்னோ பொதுக் கூட்டம் சனிக்கிழமை வரையிலும் நடைபெறும்.
அனைத்து மாநிலங்களிலிருந்தும் மொத்தமாக 5,600 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.