Home One Line P2 சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

227
0
SHARE

சென்னை: பல வெற்றி திரைப்படங்களை வழங்கிய இயக்குனர் சுசீந்திரனின் சாம்பியன் திரைப்பட முன்னோட்டம் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இப்படத்தில் புதுமுக நடிகர் விஸ்வா வடக்கு மெட்ராசில் ஓர் ஆர்வமுள்ள காற்பந்து வீரராக நடித்துள்ளார்.

இப்படத்தில் காற்பந்து பயிற்சியாளராக நடிகர் நரேன் மற்றும் கதாநாயகியாக மிருணாலினி ரவி நடித்துள்ளனர். முழுத் திரைப்படமும் சென்னை மற்றும் அது சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அரோல் கோரெல்லி இப்படத்தின் இசையமைப்பாளராக பணி புரிந்துள்ளார்.

இப்படத்தில் மனோஜ் கே பாரதி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற டிசம்பர் 13-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சுசீந்திரனின் முந்தைய விளையாட்டுத் திரைப்படங்களான  வெண்ணிலா கபடி குழு, ஜீவா மற்றும் கென்னடி கிளப் ஆகிய பட வரிசையில் தற்போது சாம்பியனும் இடம்பிடித்துள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டத்தைக் காணலாம்:

Comments