Home One Line P1 “நாட்டின் தலைமை பொறுப்பு மாற்றத்தினை குறி வைத்து என் மீது புதிய பாலியல் குற்றச்சாட்டு!”- அன்வார்

“நாட்டின் தலைமை பொறுப்பு மாற்றத்தினை குறி வைத்து என் மீது புதிய பாலியல் குற்றச்சாட்டு!”- அன்வார்

723
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது முன்னாள் ஆய்வு அதிகாரி முகமட் யூசுப் ராவுத்தர் தம்மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அன்வாரின் முன்னாள் ஆய்வு உதவியாளரான முகமட் யூசுப் ராவுத்தர் என்பவர் நவம்பர் 19 தேதியிட்ட சத்தியப் பிரமாணத்தின் வழி இந்தப் புகார்களைச் சுமத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அன்வாரின் வீட்டில் இந்த சம்பவம் நடந்ததாக யூசுப் கூறினார்.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், போர்ட் டிக்சன் இடைத்தேர்தலுக்காக தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாக அன்வார் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்தகைய அடிப்படை இல்லாமல் அவதூறுகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன். கூறப்படும் தேதியில், போர்ட் டிக்சன் இடைத்தேர்தலுக்காக நான் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தேன். கோலாலம்பூரில் நடந்த மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு, பிரச்சார அட்டவணையை நிறைவேற்ற போர்ட் டிக்சனுக்குச் சென்றேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனது செயலாளர் சுக்ரி சாஹட் காவல் துறையில் புகார் அறிக்கையை தாக்கல் செய்வார் என்றும், வழக்கறிஞர் ராம்கர்பால் சிங் யூசுப்புக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவார் என்றும் அன்வார் கூறினார்.

இந்த நடவடிக்கையானது 14-வது பிகேஆர் கட்சி மாநாடு நடந்துக் கொண்டிருக்கும் சூழலில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் தலைமை பொறுப்பு மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளதுஎன்று அவர் கூறினார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி சிகாம்புட்டில் உள்ள அன்வார் இல்லத்தில் தான் தகாத முறையில் பாலியல் முறைகேடுகளுக்கு அன்வாரால் உட்படுத்தப்பட்டதாகவும், அவர் தன்னிடம் தகாத உறவுக்கு கோரிக்கை வைத்ததாகவும் யூசுப் புகார் கூறியிருந்தார்.