Home One Line P2 சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தீவொன்றை வாங்கி, ‘கைலாசா’ என்று பெயரிட்டுள்ளார்!

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தீவொன்றை வாங்கி, ‘கைலாசா’ என்று பெயரிட்டுள்ளார்!

980
0
SHARE
Ad

புது டில்லி: பெங்களூரில் கற்பழிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு  சர்ச்சையில் சிக்கியுள்ள சாமியார் நித்தியானந்தா தற்போது, மத்திய லத்தீன் அமெரிக்காவில் ஈக்வடார் அருகே ஒரு தீவினை வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டுள்ளது ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இப்புதிய தேசத்திற்கென்று அதன் சொந்த கடப்பிதழ், கொடி மற்றும் சின்னம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.  உலகில் மிகப் பெரிய இந்து தேசமாககைலாசாவிவரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு, உலகெங்கிலும் வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது, அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கும் உரிமையை இழந்தனர்என்று இது சம்பந்தமாக வெளியிட்ட இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இப்புதிய தேசம் இனம், பாலினம், பிரிவு, சாதி, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், உலகின் அனைத்து நடைமுறை, ஆர்வமுள்ள அல்லது துன்புறுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கும் என்றும், அங்கு அவர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, அவர்களின் ஆன்மீகம், கலைகள் மற்றும் கலாச்சாரத்தை மறுப்பு, குறுக்கீடு மற்றும் வன்முறை இல்லாமல் வெளிப்படுத்தலாம்என்று அது குறிப்பிட்டுள்ளது.

கோவில் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு, மூன்றாவது கண்ணுக்குப் பின்னால் உள்ள அறிவியல், யோகா, தியானம் மற்றும் குருகுல கல்வி முறை ஆகியவற்றையும் கைலாசா வழங்குகிறது.

புதிய தேசத்தின் அரசாங்கத்திற்கு உள்நாட்டு பாதுகாப்பு, பாதுகாப்பு, கருவூலம், வணிகம், வீட்டுவசதி, மனித சேவைகள், கல்வி மற்றும் பல்வேறு துறைகள் ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகமதபாட்டில் உள்ள ஓர் ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட தங்கள் இரு மகள்களையும் விடுவிக்கக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியினர் சமீபத்தில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அவர் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 2018-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நித்யானந்தா இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று காவல் துறை உறுதியாக நம்புகின்றனர். கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் பிணையில் வெளியே வந்தார்.

இருப்பினும், கடப்பிதழ் இல்லாமல் அவர் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியிருக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரது கடப்பிதழ் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காலாவதியானது என்றும் அதை புதுப்பிப்பதற்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.