Home One Line P2 “நானே பரமசிவன், எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்ய முடியாது”, நித்தியானத்தா இந்திய அரசுக்கு சவால்!

“நானே பரமசிவன், எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்ய முடியாது”, நித்தியானத்தா இந்திய அரசுக்கு சவால்!

1237
0
SHARE
Ad

புது டில்லி: பாலியல் குற்றச்சாட்டு, குழந்தைகள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தமக்கு எதிராக எந்த சட்டமும் என்றும் செய்ய இயலாது என்று சமீபத்திய காணொளியில் குறிப்பிட்டிருந்தது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அண்மையில், லத்தீன் அமெரிக்கப் பகுதியில் ஒரு தீவினை வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாக அவரைச் சார்ந்த வலைத்தளம் ஒன்று குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே, நித்தியானந்தா வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் மீது குஜராத் கவால் துறையினர் குழந்தைகள் கடத்தல், குழந்தைகளை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் அவரது அகமதாபாட் ஆசிரமத்தில் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இணையத்தளத்தை உருவாக்குவது போல ஒரு நாட்டை உருவாக்குவது ஒன்றும் விளையாட்டு விவகாரம் அல்ல என்று இந்திய அரசு நித்தியானந்தாவுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் நித்தியானந்தாவுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் நித்தியானந்தாவின் கடப்பிதழ் இரத்து செய்யப்பட்டுள்ளது.