Home One Line P1 அமானா: 2-வது முறையாக கட்சித் தலைவராக முகமட் சாபு தேர்வு!

அமானா: 2-வது முறையாக கட்சித் தலைவராக முகமட் சாபு தேர்வு!

697
0
SHARE
Ad
படம்: நன்றி முகமட் சாபு டுவிட்டர் பக்கம்

கோலாலம்பூர்: அமானா கட்சியின் தலைமை பொறுப்பினை தொடர்ந்து எற்று நடத்த முகமட் சாபு இரண்டாவது முறையாக கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2019 முதல் 2022 வரையிலும் அவர் அப்பொறுப்பில் இருப்பார்.

நேற்றிரவு வெள்ளிக்கிழமை நடந்த 2019 அமானா கட்சி மாநாட்டில் 2019-2022 அமர்வுக்கான கட்சியின் தேசிய தலைமைக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநாட்டின் செய்தித் தொடர்பாளர் ஒன் ஜாபார் தெரிவித்தார்.

சாலாவுடின் அயோப் இரண்டாவது முறையாக துணைத் தலைவர் பதவியை தக்க வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், டாக்டர் முஜாஹிட் யூசுப் மற்றும் ஹசனுடின் முகமட் யூனுஸ் ஆகியோரை தக்கவைத்துக்கொண்டதோடு, புதிய உதவித் தலைவராக மஹ்பூஸ் உமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற 2019-ஆம் ஆண்டுகான கட்சி தேசிய மாநாட்டில் 27 தேசிய குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.