கோலாலம்பூர், ஏப்ரல் 8- எதிர்வரும் மே மாதம் 3, 4, 5, ஆம் தேதிகளில் பத்துகேவ்சில் நடைபெறவிருக்கும் கோப்பியோ தலைமையிலான அனைத்துலக இந்திய வம்சாவளிப் பெருவிழா 2013இல் இந்திய பாரம்பரிய உள்ளரங்க விளையாட்டுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
காலப்போக்கில் மறைந்துவிட்ட பல இந்திய பாரம்பரிய விளையாட்டுகளை இவ்விழாவில் புதுமைப்படுத்த ஆயத்தமாகியுள்ளது. ஆடுபுலி, கேரம், சதுரங்கம், கல்லாங்காய், பல்லாங்குழி, தாயம் பரமபதம் போன்ற இந்தியர்களின் விளையாட்டுகள் இவ்விழாவிற்குச் சிறப்புச் சேர்க்கவிருக்கின்றன.
கடந்தாண்டைப் போலவெ இவ்வாண்டும் திரளாக வருகை புரிந்து, நடைபெறவிருக்கும் விளையாட்டுகளில் பொதுமக்கள் பங்கு கொண்டு இப்பெருவிழாவைச் சிறப்பிக்குமாறு கோப்பியோ கேட்டுக் கொள்கிறது.
மேல் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ராம் 017- 2078503 மற்றும் கோப்பியோ 03-22760467 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.
இதனை தவிர்த்து, www.facebook.com/piofestkl என்ற முகபுத்தகம் வழியும் www.piofest.com என்ற இணையத்தள முகவரி மூலமும் தொடர்பு கொள்ளலாம்.