வான்கூவர்: உலகின் முதல் முழுமையான மின்சார பயணிகள் விமானம் நேற்று செவ்வாயன்று தொடக்க சோதனையை மேற்கொண்டது. கனடிய நகரமான வான்கூவரில் இருந்து அவ்விமானம் புறப்பட்டது.
“அனைத்து மின்சார வடிவத்திலும் பயணிகள் விமான போக்குவரத்து செயல்பட முடியும் என்பதை இது நிரூபிக்கிறது” என்று சியாட்டலை தளமாகக் கொண்ட பொறியியல் நிறுவனமான மேக்னிக்ஸ் (magniX) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரோய் கன்சார்ஸ்கி (Roei Ganzarsk) கூறினார்.
இந்த தொழில்நுட்பம், விமான நிறுவனங்களுக்கு கணிசமான செலவு சேமிப்பை ஏற்படுத்தும் என்று கன்சார்ஸ்கி கூறினார். ஆயினும், பூஜ்ஜிய உமிழ்வைக் அவர் குறிப்பிடவில்லை.
“இது மின்சார விமான யுகத்தின் தொடக்கத்தை குறிக்கிறது” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கார்பன் உமிழ்வு மிக வேகமாக வளர்ந்து வரும் காரணங்களில் பயணிகள் விமான போக்குவரத்தும் ஒன்றாகும், ஏனெனில் மக்கள் அதிகளவில் விமானத்தில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.