Home One Line P2 துல்லியமான வானிலை தரவுகளை பெறும் நோக்கில் ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை இஸ்ரோ பாய்ச்சியது!

துல்லியமான வானிலை தரவுகளை பெறும் நோக்கில் ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை இஸ்ரோ பாய்ச்சியது!

803
0
SHARE
Ad

பெங்களூரு: ரிசாட்-2பிஆர்1 (RISAT-2BR1) எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று புதன்கிழமை விண்ணில் பாய்ச்சியது. பிஎல்எஸ்விசி-48  ராக்கெட் ஶ்ரீ ஹரி கோட்டாவில் உள்ள விண்வெளியில் ஏவப்பட்டது.

விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக இஸ்ரோ 628 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது

இந்த செயற்கை கோளுடன் சேர்ந்து ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிக ரீதியில் விண்ணில் ஏவப்பட்டன.

#TamilSchoolmychoice

இன்றைய இந்த முயற்சியானது மிக முக்கியமான மைல்கல்லை எட்டியது என்றும், பிஎஸ்எல்வியின் 50-வது விமானமாகவும் ஶ்ரீ ஹரி கோட்டாவிலிருந்து 75-வது வாகன பயணமாகவும் இது கருதப்படுகிறது