Home One Line P1 மீதமுள்ள 40 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி 2023-க்குள் நிறைவேற்றும்!

மீதமுள்ள 40 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி 2023-க்குள் நிறைவேற்றும்!

694
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் வாக்குறுதியில் மீதமுள்ள 40 விழுக்காடு உறுதிமொழிகளை வருகிற 2020 தொடங்கி அவற்றை சாத்தியப்படுத்துவதற்கு, அடுத்த ஆண்டு அரசாங்கத்திற்கு ஒரு முக்கியமான ஆண்டாக அது அமைய உள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நம்பிக்கைக் கூட்டணி 60 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும், 2023-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய  40 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறியதை ஜசெக பொதுச் செயலாளர் லிம் சுட்டிக் காட்டினார்.

நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு தொடக்கமாக 2020-ஆம் ஆண்டு முக்கியமானது. அடுத்த ஆண்டு தொடங்கப்படும். எனவே 2023-க்கு முன்னர் அனைத்தும் நிறைவேற்றப்படும்என்று அவர் இன்று சனிக்கிழமை  செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ஒழித்தல், எண்ணெய் விலையை 2.20 ரிங்கிட் முதல் 2.08 ரிங்கிட் வரை குறைத்தல் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பொது போக்குவரத்து பயனர்களுக்கு மாதந்தோறும் 100 ரிங்கிட் இரயில் போக்குவரத்து கட்டணத்தை (எல்ஆர்டி) அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட நம்பிக்கைக் கூட்டணியின் உறுதிமொழிகளில் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஒரு தூய்மையான அரசாங்கம் என்று லிம் விவரித்தார். நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களை மக்களுக்கு அறிவித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.