Home One Line P1 மீடியா பிரிமா: என்எஸ்டிபியின் 543 ஊழியர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்!

மீடியா பிரிமா: என்எஸ்டிபியின் 543 ஊழியர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்!

855
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மீடியா பிரிமா பெர்ஹாட் தமது செயல்பாட்டை குறைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரேஸ் (என்எஸ்டிபி) குழுவின் மொத்தம் 543 ஊழியர்கள் அடுத்த மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.

இந்த நடவடிக்கையானது நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஹாரியான் மெட்ரோ மற்றும் பெரிதா ஹாரியான் ஆகிய மூன்று வெளியீடுகளை பாதிக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்ச் 12-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் என்எஸ்டிபி தேசிய பத்திரிகையாளர் சங்கத்தின் (என்யூஜே) தலைவர் பாரா மார்ஷிதா அப்துல் பாடா கூறினார்.

​​”அனைத்து பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள், துணைக்குழுக்கள் உட்படஎன்று மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆரம்பத்தில் புகைப்படத்தின் முழு பகுதியையும் மூடுவதற்கான திட்டங்கள் இருந்தன, ஆனால், நாங்கள் (என்யூஜே) இதை ஏற்கவில்லை. எனவே ஒரு சிறிய எண்ணிக்கையிலான புகைப்படக் கலைஞர்கள் தக்கவைக்கப்படுவார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்

பாங்சாரின் ஜாலான் ரியோங்கில் உள்ள என்எஸ்டிபி தலைமையகத்தைத் தவிர, நாடு முழுவதும் உள்ள மாநில பணியகங்களும் இணைக்கப்படும் என்றும், இதன் மூலமாக 14-லிருந்து ஆறாக அதன் பணியகங்கள் செயல்படும் என்றும் பாரா கூறினார்.

கிழக்கு கடற்கரையில் (பகாங், கிளந்தான் மற்றும் திரெங்கானு), வடக்கு (பினாங்கு, கெடா, ஈப்போ மற்றும் பெர்லிஸ்) மற்றும் தெற்கு (ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா) ஆகிய மாநிலங்களில் உள்ள பிரிவுகள் மூன்று பணியகங்களாக ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

புத்ராஜெயா மற்றும் ஷா அலாம் பணியகங்களும் இணைக்கப்பட உள்ளதாகவும், சபா மற்றும் சரவாக் ஒவ்வொன்றும் ஒரு பணியகங்களைக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.