Home One Line P2 திகில் நிறைந்த ‘வி1’ படத்தின் முன்னோட்டத்தை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்!

திகில் நிறைந்த ‘வி1’ படத்தின் முன்னோட்டத்தை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்!

709
0
SHARE
Ad

சென்னைபுதுமுக இயக்குனர் பவெல் நவகீதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வி1 (V1).   திகிலும் மர்மமும் கலந்த இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை இயக்குனர் பா.ரஞ்சித் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் புதுமுக நடிகர் ராம் அருண் கெஸ்ட்ரோ மற்றும் விஸ்ணுபிரியா பிள்ளை ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், காயத்ரி, லிஜீஷ் மற்றும் மிமி கோபி போன்ற நடிகர்களும் இணைந்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வி-1 என்ற எண் கொண்ட வீட்டில் நடந்த கொலைக் குறித்த புலனாய்வுத் திரைப்படம் இது என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் வி1. தற்போது இந்த விறுவிறுப்பான முன்னோட்டம் இரசிகர்களிடையே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வி1 திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்: