Home One Line P1 “இன, மத மோதல்கள் உள்ளன, ஆயின், நாட்டில் நிலவும் அமைதியுடன் ஒப்பிடும் போது அவை சிறியவை!”-...

“இன, மத மோதல்கள் உள்ளன, ஆயின், நாட்டில் நிலவும் அமைதியுடன் ஒப்பிடும் போது அவை சிறியவை!”- மகாதீர்

558
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மலேசியர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட, உண்மையான இஸ்லாமிய போதனைகள்தான் காரணம் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

நேற்றிரவு புதன்கிழமை கோலாலம்பூர் உச்சமாநாட்டில் (கேஎல் சம்மிட் 2019) வரவேற்பு உரை வழங்கிய அவர், மலேசியாவில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்கள் பல தசாப்தங்களாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகக் கூறினார்.

1957-இல் மலேசியா ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த பாரம்பரியம் வேரூன்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த நாட்டில் மக்களும், மதங்களும் சம்பந்தப்பட்ட மோதல்களும் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால், அவை அமைதி, நல்லெண்ணம் மற்றும் செழிப்பு போன்றவற்றோடு ஒப்பிடும்போது மிகச் சிறியவை மற்றும் அற்பமானவை.”

எங்கள் கருத்துப்படி, இஸ்லாம் விரும்புவது இதுதான்முஸ்லிமல்லாதவர்களுடன் நிம்மதியாக வாழ, வளமான, அமைதியான மற்றும் இணக்கமான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்என்று அவர் மேலும் கூறினார்.

இந்நாட்டில் ஒன்றாக இணைந்து செழிப்பை பகிர்ந்து கொள்ள முடிந்தது அதிர்ஷ்டம் என்று பிரதமர் தெரிவித்தார்.