Home One Line P2 நிதி பற்றாக்குறையினால் ஆசியான் பாராலிம்பிக் போட்டிகள் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

நிதி பற்றாக்குறையினால் ஆசியான் பாராலிம்பிக் போட்டிகள் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

953
0
SHARE
Ad

மணிலா: பிலிப்பைன்ஸ் விளையாட்டு ஆணையத்திலிருந்து (பிஎஸ்சி) போதுமான நிதி ஒதுக்கீடு பற்றாக்குறையினால், பிலிப்பைன்ஸ் ஆசிய விளையாட்டு அமைப்புக் குழுவுக்கு  வேறு வழியில்லாமல் 10-வது பாரா ஆசியான் விளையாட்டை வேறொரு தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பாரா ஆசியான் விளையாட்டு கூட்டமைப்பு (ஏபிஎஸ்எப்) ஓர் அறிக்கையில், பிஎஸ்சியின் ஆலோசனையின் பேரில் 2020-ஆம் ஆண்டு மார்ச் 20- லிருந்து மார்ச் 28-ஆம் தேதி வரையிலும், இந்த போட்டிக்கான புதிய தேதி முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

10-வது பாரா ஆசியான் விளையாட்டுக்கள் முதலில் ஜனவரி 18 முதல் 24 வரை நடத்த திட்டமிடப்பட்டது.

#TamilSchoolmychoice

அனைத்து தேசிய பாராலிம்பிக் குழுக்கள் (என்பிசி) மற்றும் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டு, விளையாட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு தகுந்தார் போல மாற்றங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.”

அடுத்த ஆண்டு மார்ச்சில் விளையாட்டுக்கள் வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, என்பிசி தரப்பு, விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், குழுக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் புரிதலையும் ஏபிஎஸ்எப் நாடுகிறதுஎன்று ஏபிஎஸ்எப் தலைவர் ஒசோத் பவிலாய் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முன்னதாக, தேசிய விளையாட்டு மன்றம் (எம்எஸ்என்) இயக்குனர் டத்தோ அகமட் ஷபாவி இஸ்மாயில், ஜனவரி 18-14 தேதிகளில் திட்டமிடப்பட்ட பிலிப்பைன்ஸ் பாராலிம்பிக் போட்டிகள், மார்ச் 20- 28-க்கு ஒத்திவைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.