Home One Line P2 குடியுரிமை திருத்தச் சட்டம்: 11 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

குடியுரிமை திருத்தச் சட்டம்: 11 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

605
0
SHARE
Ad

புது டில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு அலை ஓங்கியிருக்கும் நிலையில், இந்தியாவில் இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் இதுவரையிலும் 11 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் யாரும் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் இறக்கவில்லை என்று உத்திரபிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது. ஒரு வேளை துப்பாக்கிக் குண்டுகளினால் அவர்கள் உயிர் இழந்திருந்தால் அது காவல் துறையினரின் நடவடிக்கையாக இருக்காது என்று அது தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் உத்திரபிரதேச மாநிலத்தின் 13 மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன. மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மீறி ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்

#TamilSchoolmychoice

 குடியுரிமை திருத்தச் சட்டமானது வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்கள் இந்திய குடிமக்களாக மாறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.