Home One Line P1 ஜாவி பாடம்: “அனைத்து விதமான கூட்டங்களையும் தவிர்க்கவும்!”- அன்வார்

ஜாவி பாடம்: “அனைத்து விதமான கூட்டங்களையும் தவிர்க்கவும்!”- அன்வார்

701
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜாவி பாடம் தொடர்பான அனைத்து விதமான எதிர்ப்பு மற்றும் சார்புடைய கூட்டங்களையும் தவிர்க்குமாறு  பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். சீனக் கல்வியாளர் குழுவான  டோங் சோங் மற்றும் மலாய் அமைப்புக்களை அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

ஜாவி பாடம் சர்ச்சை அரசியல் மற்றும் இன பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக அவர் கூறினார்.

எனவே, டோங் சோங் உட்பட அனைவரையும் பேச்சு வார்த்தைக்கு திரும்புமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

ஜாவி பாடம் எதிர்ப்பு கூட்டம், ஜாவி சார்புடைய கூட்டங்களை ஏற்படுத்தும். ஜாவி எழுத்து என்பது நாட்டின் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ”என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மலேசியா பல இன மற்றும் கலாச்சார நாடாக உள்ளது, அங்கு மக்கள் பெருமைப்பட வேண்டும் மற்றும் அவர்களின் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும் என்ரு அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், டோங் ஜியாவோ சோங்கை டிசம்பர் 28-ஆம் தேதி நடத்தவுள்ள மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான அவர்களின் நோக்கத்தை இரத்து செய்யுமாறு எச்சரித்தார்