Home Uncategorized “அன்பும் அமைதியும் நிலவக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

“அன்பும் அமைதியும் நிலவக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

1115
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “தேவக்குமாரன் இயேசுபிரான் பிறந்த இந்த நன்னாளை, உலககெங்கும் உள்ள கிறிஸ்துவப் பெருமக்கள் உவகையுடன் கொண்டாடி வருகின்றனர். “உன்னைப்போல பிறரையும் நேசி” என்று மனித குலத்திற்கு அன்பை போதித்து அருளிய இயேசுபிரான், மனுக்குலத்தின் பாவங்களை ஏற்று அவர்களுக்காக தன்னை மரித்துக் கொண்டவர்” என கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ செனட்டர் ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், அத் தியாகச் செம்மலின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடும் அனைவருக்கும் தமது இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.

“அன்பு, ஈகை, இதயத்தில் தூய்மை, இறைவன் மீது நாம் கொள்ள வேண்டிய விசுவாசம் ஆகியவற்றினை அன்பான மொழிகளில் போதித்தவர் இயேசுபிரான். அன்பாலும், அமைதியாலும் உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் போதித்த போதனைகளை இதயத்தில் தாங்கி. வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டும். மதங்கள் என்பது மனுக்குலத்தை வழிநடத்தவே வகுக்கப்பட்டவை. எனவே, எம்மதமாக இருந்தாலும், அந்த மதத்தின் வேதவாக்குகள் மனிதர்களை நல்வழிப்படுத்தும் வகையிலேயே அருளப்பட்டுள்ளன என்பதனை புரிந்து கொண்டு, பல்லினங்கள் வாழும் இந்நாட்டில் நாம் இதனை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அந்த வகையில், இயேசுபிரான் அருளிய அன்பின் நற்செய்தியும், நற்செயலும், தடையின்றி கிடைத்திடவும். இந்நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையையும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்நாட்டின் தனிச்சிறப்பையும் என்றென்றும் காத்து நாம் பயணம் செய்ய வேண்டும் என்று இந்த வேளையில் தாம் தெரிவித்துக் கொள்வதாகவும், கிறிஸ்துமஸ் நாளினைக் கொண்டாடும் அனைவருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும். மஇகாவின் தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ செனட்டர் ச. விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.