Home One Line P2 “மாஸ்டர்” – விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர்

“மாஸ்டர்” – விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர்

948
0
SHARE
Ad

சென்னை – இதுவரையில் ‘விஜய் 64’ எனப் பெயரிடப்பட்டு தயாரிப்பில் இருந்து வந்த நடிகர் விஜய்யின் புதிய படத்திற்கு ‘மாஸ்டர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைகிறார்.

மாநகரம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து அண்மையில் வெளிவந்த ‘கைதி’ படத்தையும் இயக்கி பாராட்டுகளைப் பெற்றார்.

இதற்கிடையில் இணையத் தொடராக, பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த “வெள்ளை ராஜா” படத்தின் திரைக்கதை அமைப்பையும் லோகேஷ் கையாண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியையும் இணைத்திருப்பதால், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விஜய் கல்லூரி பேராசிரியராக வருவதாகவும், விஜய் சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திரம் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 2020 ஏப்ரலில் ‘மாஸ்டர்’ வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.