Home One Line P1 “நம்பிக்கைக் கூட்டணி கண்ட வெற்றிகளை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமில்லை!”- மகாதீர்

“நம்பிக்கைக் கூட்டணி கண்ட வெற்றிகளை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமில்லை!”- மகாதீர்

588
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டபின் அது அடைந்த வெற்றிகளையும், எடுத்த முயற்சிகளையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும் அரசு அல்ல என்று பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

மக்கள் அமைதியாக வாழ்வதும், மேம்பட்ட பொருளாதாரமும் அவரது தலைமையின் வெற்றியைக் குறிக்கிறது என்றும், அது அனைவராலும் பாராட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அரசாங்கம் அடைந்த அனைத்து வெற்றிகளையும் சொல்லிக் கொண்டே இருப்பது நல்லதல்ல. ஆனால், நினைவில் கொள்ளுங்கள், அதிகார மாற்றம் அமைதியானதாக இருக்கும்போது இந்த நாடு மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தது.”

நான்கு கட்சிகள் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் சேர்ந்து செயல்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடிய அமைச்சரவையை அமைத்தன.”

நம் நாடு நிலையானது. மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொலை செய்துக் கொல்லவில்லை. ஈரான் தெஹ்ரானைப் போல் தெருக்களில் மில்லியன் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவில்லை. ஆகவே, அவர்கள் (மெர்டெகா செண்டர் ஆய்வு) சரியான பாதையில் இல்லை என்று மக்கள் உணர்ந்தால், அதுஎன்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியவில்லைஎன்று துன் மகாதீர் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆராய்ச்சி நிறுவனமான மெர்டேகா செண்டரின் சமீபத்திய கணக்கெடுப்பு குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதாவது, 61 விழுக்காடு மலேசியர்கள் நாடு சரியான பாதையில் இல்லை என்று உணர்வதாக அது குறிப்பிட்டிருந்தது.