Home One Line P1 தமிழ், சீனப்பள்ளிகளில் ஜாவி பாடம் கற்பித்தலை தீர்மானிக்க ஒப்புதல் பாரங்கள் விநியோகம்!

தமிழ், சீனப்பள்ளிகளில் ஜாவி பாடம் கற்பித்தலை தீர்மானிக்க ஒப்புதல் பாரங்கள் விநியோகம்!

785
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமிழ் மற்றும் சினப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு மலாய் மொழி பாடப்புத்தகத்தில் ஜாவி பாடம் கற்பிப்பதைத் தீர்மானிக்க பெற்றோர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை அமைத்து தருவதற்கு ஏதுவாக கல்வி அமைச்சு, ஆண்டின் தொடக்கத்தில் பெற்றோர்களுக்கு ஒப்புதல் பாரங்களை விநியோகித்து வருவதாகத் தெரிகிறது.

பாதிக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஒப்புக்கொண்டால், மூன்று பக்கங்கள் கொண்ட ஜாவி பாடம் கற்றல் கற்பித்தலில் சேர்க்கப்படும்.

பெற்றோர்களின் கருத்தைப் பெற்ற பிறகு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் இந்த விவகாரம் தொடர்பாக முடிவு செய்து, அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள கல்வித் துறைகளுக்கு ஒரு கூட்டு பதிலை சமர்ப்பிக்கும்.

#TamilSchoolmychoice

பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜாவி பாடத்தை செயல்படுத்துவதில்உடன்படுதல்” அல்லதுஉடன்படவில்லைஎன்பதைக் குறிக்கலாம்.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதி முதல் பள்ளி தொடங்குவதற்கு முன்பே சில பள்ளிகளுக்கு இப்பாரங்கள் கிடைத்திருப்பது கண்டறியப்பட்டது.

பாரங்களை தங்கள் பள்ளிக்கு சமர்ப்பிக்க பெற்றோர்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.